ஐபிஎல் ரசிகர்களே நீங்க எதிர்பார்த்து கொண்டு இருந்த மாதிரி நாளை தொடங்க உள்ளது ஐபிஎல் போட்டி. அதனால் நிச்சியமாக ஐபிஎல் ரசிகர்கள் அனைவரும் நல்ல ஒரு எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எதிர்கொள்ள போகிறது.
தீவிரமான பயிற்சி செய்துவரும் இரு அணிகளுக்கும் நாளை மாலை 7:30 அளவில் தொடங்க உள்ளது. இந்த முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைத்தனத்தில் நடைபெற போகிறது. கடந்த ஆண்டு நடந்த அபியேல் போட்டியில் சிஎஸ்கே மோசமான தோல்விகள் பல சந்தித்தது.
அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ப்ளே -ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெறாமல் போய்விட்டது. அதுவே முதல் முறை ஐபிஎல் சிஎஸ்கே அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் தேர்வாகாமல் போனது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே அணியின் வீரர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த ஆண்டு நிச்சியமாக காம்பேக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த சிஎஸ்கே வீரர்கள் கடந்த மார்ச் தொடக்கத்தில் இருந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ரெய்னா அவரது சொந்த பிரச்னை காரணமாக போட்டியில் விளையாட முடியாமல் போய்விட்டது.
ஆனால் இந்த முறை அப்படி இல்லை, சிஎஸ்கே அணி மிகவும் வலுவான அணியாகத்தான் இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஏலத்தில் சிஎஸ்கே அணியில் புதிதாக மெயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம், ராபின் உத்தப்பா போன்ற வீரர்கள் இருக்கின்றனர். சிஎஸ்கே ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பிர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; அவரிடம் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே – ஆஃப் வருமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கவுதம் கம்பிர் நிச்சியமாக இல்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டும் ஐந்தாவது இடத்தில தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரர் கவுதம் கம்பிர். இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மிகவும் கோவமாக இருக்கின்றனர்.
இவர் சொன்னது அனைத்தும் பொய் என்று நிரூபிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?? ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையுமா சிஎஸ்கே ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டி வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.