CSK அணியின் ப்ளேயிங் 11ல் நடக்க போகும் ஒரு மாற்றம் ; இது மட்டும் நடந்தால் சென்னை அணிக்கு தோல்வியே இல்லை ;

0

ஐபிஎல் 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை வெற்றிகரமாக 24 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த முறை மொத்தம் 10 அணிகளை கொண்டு விளையாடுவதால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு போட்டி சென்னை அணிக்கு சாதகமாக இல்லை என்பது தான் உண்மை. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சென்னை அணியை தல மகேந்திர சிங் தோனி சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். அதிலும், தோனி தலைமையிலான சென்னை அணி தான் நான்கு முறை சாம்பியன் படத்தை பெற்றுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கும் இரு தினங்களுக்கு முன்பு தான் தோனி நான் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக கூறினார். அதன்படி இப்பொழுது சென்னை அணியை ஆல் – ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தான் வழிநடத்தி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் இதுவரை சென்னை அணி ஐந்து போட்டிகளில் நான்கு போட்டியில் தோல்வியை பெற்றுள்ளது சென்னை.

இதுவே முதல் முறையாகும் இப்படி தோல்வியை பெற்றுள்ளது. சென்னை அணியின் தோல்விக்கு என்ன தான் காரணம் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சில போட்டிகளில் சென்னை அணி 200க்கு மேற்பட்ட ரன்களை அடித்தும் தோல்வியை தான் சந்தித்து வருகிறது.

அதற்கு முக்கியமான காரணம் பவுலிங் தான்..! ஆமாம், கடந்த ஆண்டு சென்னை அணி ஷர்டுல் தாகூர், தீபக் சஹார் போன்ற முன்னணி பவுலர்கள் அணியில் விளையாட வந்தனர். ஆனால் இந்த முறை ஷர்டுல் தாகூர் டெல்லி அணியில் விளையாடி வருகிறார். தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால், அணியில் விளையாட முடியவில்லை.

அதனால் சென்னை அணிக்கு சரியான பவுலர் இல்லாமல் திணறி வருகிறது. இருப்பினும் சென்னை அணியில் புதிதாக முகேஷ் சவுத்திரி அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஆனால் இவரது பவுலிங் அனைவரும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை.

சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் முகேஷ் 3 ஓவர் பவுலிங் செய்து 40 ரன்களை கொடுத்து வெறும் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, இரு முக்கியமான கேட்ச் மிஸ் செய்துள்ளார். அந்த கேட்ச் மட்டும் பிடித்திருந்தால் நிச்சியமாக இன்னும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும் என்பது தான் உண்மை.

அதனால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அண்டர் 19 வீரரான ராஜேவர்தன் ஹங்காரகேகர் அணியில் இடம் பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் முகேஷ் பவுலிங் சென்னை அணிக்கு எந்த விதமான பலனையும் கொடுக்கவில்லை. அதனால் நிச்சியமாக இந்த மாற்றத்தை சென்னை அணி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணியின் முக்கியமான ப்ளேயிங் 11 என்ன என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here