இந்த முறையும் சென்னையில் போட்டி இல்லையா ?? சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள் ; காரணம் இதுதான் ;

0

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் தொடங்கியது. அதில் இருந்து இப்பொழுது வரை ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் லீக் போட்டிகள்.

அதுவும் இந்த ஆண்டு ஐபிஎல் டி20 2022 போட்டியில் லக்னோ மற்றும் குஜராத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் ஏலத்தை இந்த முறை மிகப்பெரிய அளவில் நடத்த முடிவு செய்த பிசிசிஐ, அதனை சிறப்பாக நடத்தி முடிந்துள்ளது. கடந்த 12 , 13ஆம் தேதிகளில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் டி20 லீக் 2022 போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் இருப்பதால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

அதுவும் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 முதலில் இந்தியாவில் தான் தொடங்கியது. ஆனால் சில வீரர்களுக்கு தொற்று உறுதியான காரணத்தால் இந்த ஆண்டு சில முக்கியமான முடிவுகளை கையில் எடுத்துள்ளது பிசிசிஐ. அதில் ஒன்று தான் போட்டிகள் நடைபெற உள்ள மைதானங்கள். ஆமாம்..! எப்பொழுதும் அந்த அணியில் அவரவர் ஹாம் மைதானத்தில் நிச்சியமாக நடைபெறும்.

ஆனால் இந்த முறை அப்படி இல்லை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்ட தகவலின் படி வான்கடே, ப்ராபௌர்னே, பட்டில் மற்றும் எம்.சி.ஏ. சர்வதேச மைதானம் போன்ற நான்கு மைதானத்தில் மட்டுமே போட்டியை நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஆமாம்.. சிஎஸ்கே அணி இந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட சென்னையில் விளையாடாது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4 போட்டிகள் வான்கடே மைத்தனத்திலும், 4 பட்டில் மைதானத்திலும், 3 ப்ரபோரனேவிலும் மற்றும் 3 போட்டிகள் எம்.சி.ஏ. மைதானத்திலும் நடைபெற உள்ளது. இதனை உறுதி செய்துள்ளது பிசிசிஐ. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டி வருகின்ற ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்க போவதாக பிசிசிஐ கூறியுள்ளது.

இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது. அதனால் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகள் நடந்து முடிந்த பிறகு ஐபிஎல் டி20 2022 போட்டிக்கான பயிற்சிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை யார் சாம்பியன் பட்டத்தை வெல்ல போகிறார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here