HomeTrending Newsசிங்கம் களமிறங்கிடுச்சு ; இந்திய அணியின் நம்பிக்கை நாயகம் திரும்ப இந்திய அணிக்கே வந்துவிட்டார் ;...

சிங்கம் களமிறங்கிடுச்சு ; இந்திய அணியின் நம்பிக்கை நாயகம் திரும்ப இந்திய அணிக்கே வந்துவிட்டார் ; சந்தோஷத்தில் இருக்கும் ரசிகர்கள் ;

ஆசிய கோப்பை : கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை ஆசிய கோப்பை போட்டிக்கான டி-20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் லீக் சுற்றில் திணறிக்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை கைப்பற்றியுள்ளது இந்திய. இந்திய அணியின் மோசமான நிலைமைக்கு என்ன காரணமாக இருக்கும் ?

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா, ஷமி, ஹர்ஷல் பட்டேல் போன்ற முன்னணி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. அதுமட்டுமின்றி ரவீந்திர ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டுள்ள காரணத்தால் ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்தே விலகியுள்ளார். அதனால் ப்ளேயிங் 11ல் யார் யார் விளையாட வைக்க வேண்டுமென்பதில் பல குழப்பங்கள் எழுந்து வருகிறது.

15 பேர் மற்றும் 3 பேர் கொண்ட காத்திருப்பு வீரர்களின் பட்டியல் ஆசிய கோப்பை போட்டிகள் தொடங்கும் முன்பு அறிவித்தது இந்திய. அப்பொழுது தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் காத்திருப்பு வீரர்களான பட்டியலில் இருந்து தீபக் சஹார் வெளியேற்றப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக குல்தீப் சென் இடம்பெற்றார்.

தீபக் சஹார் அணியில் இருக்க வேண்டுமென்று பல கிரிக்கெட் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப தீபக் சஹார் இந்திய அணியின் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார். ஆமாம், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக தீபக் சஹார் இடம்பெற்றது நல்ல விஷயம் போல தான் தெரிகிறது.

ஒரு பவுலராக மட்டுமின்றி அவ்வப்போது பேட்டிங் செய்து ரன்களையும் விளாசி வருகிறார் தீபக் சஹார். ஆனால் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அவரதுவருகை உதவியாக இருக்கும். இன்று நடைபெற்று கொண்டு இருக்கும் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஷனக்க தலைமையிலான இலங்கை அணியும் மோதியுள்ளன.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 173 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் மட்டுமின்றி அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வென்றால் மட்டுமே ஆசிய கோப்பை டி-20 போட்டிக்கான இறுதி போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புகள் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img