ஐபிஎல் போட்டியில் இப்படி ஒரு பவுலரா ?? என்று சொல்லும் அளவிற்கு அவ்வளவு திறமையான வீரராக இருப்பதாக கூறியுள்ளார் டெல் ஸ்டெய்ன்.


ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த 26ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை சிறப்பாக மற்றும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதற்கு முக்கியமான காரணம், இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகளை கொண்டு விளையாடுவது தான். ஆமாம், இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.
சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை பற்றி பேச தொடங்கினால் வார்னர் தான் நியாபகத்திற்கு வரும். ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் வார்னரை கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றியது.


ஆனால் இந்த முறை அப்படி ஒன்றும் பெரிய அளவில் புள்ளிபட்டியலில் இடம்பிடிக்கவில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால், இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இரு போட்டியில் வென்று 8வது இடத்தில் உள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் 2022க்கு மெகா ஏலம் நடைபெறும் என்று தகவலை வெளியிட்டது பிசிசிஐ.
அதன்படி அனைத்து அணிகளும் அதிகபட்சமாக நான்கு வீரர்களை தக்கவைத்துக்கொண்டது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி புதிய வீரரான உமர் மாலிக்கை தக்கவைத்து. அது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் நடராஜனுக்கு பதிலாக அணியில் இடம்பெற்று 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் எப்படி தக்கவைத்தனர் என்று பல கேள்விகள் எழுந்தன.


அதற்கு முக்கியமான காரணம் அவரது வேகம் தான். அவரது பவுலிங் மிகவும் வேகமாக இருப்பதால் நிச்சயமாக அணியில் தேவைப்படும் என்று தக்கவைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி. இதனை பற்றி பேசிய தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான டெல் ஸ்டெய்ன் கூறுகையில் ;
“எனக்கு தெரிந்து நிச்சியமாக உமர் மாலிக்-க்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. ஏனென்றால் அவரது பவுலிங் மிகவும் அருமையாக மட்டுமின்றி வேகமாகவும் உள்ளது தான் முக்கியமான காரணம். அவர் வீசும் வேகத்தில் பல வீரர்கள் பவுலிங் செய்யலாம். ஆனால் அவரிடம் உள்ள திறன் மற்ற வீரர்களிடையே நான் பார்க்கவில்லை.”


நிச்சியமாக அந்த திறன் அவரது வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் டெல் ஸ்டெய்ன். இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!