Advertisement
HomeTrending Newsபும்ராவிற்கு பிறகு இந்த பையன் தான் இந்திய அணியின் எதிர்காலம் ; அதில் மாற்றமே இல்லை...

பும்ராவிற்கு பிறகு இந்த பையன் தான் இந்திய அணியின் எதிர்காலம் ; அதில் மாற்றமே இல்லை ; ஆஷிஷ் நெஹ்ரா ஓபன் டாக் ;

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் இரு தினங்களுக்கு முன்பு நிறைவடைந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் டி-20 போட்டிக்கான தொடரையும், நியூஸிலாந்து அணி ஒருநாள் போட்டிக்கான தொடரையும் வென்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் :

நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா , கே.எல்.ராகுல், விராட்கோலி, பும்ரா, போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் ஒரு சில இளம் வீரர்களை வைத்து விளையாடியது இந்திய. ஒருநாள் போட்டியில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டாலும், டி-20 போட்டியில் வென்றுள்ளது இந்திய.

ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் அறிமுகம் ஆனதில் இருந்து இளம் வீரர்களை சரியாக தேர்வு செய்வதில் பிசிசிஐ-க்கு சுலபமாக மாறிவிட்டது தான் உண்மை. ஒரு சில ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரரை சர்வதேச இந்திய அணியில் அறிமுகம் செய்து வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. அதில் ஒருவர் தான் வேகப்பந்து வீச்சாளர் உம்ரன் மாலிக்.

இப்பொழுது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பவுலராக திகழும் பும்ரா அணியில் இல்லையென்றால் இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலைமைக்கு தள்ளப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்கு உதாரணம் தான் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள். அதில் பும்ராவின் பங்களிப்பு இல்லாத காரணத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

அதனால் இனிவரும் போட்டிகளில் அதிகப்படியான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தயார் செய்ய வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஐபிஎல் 2021 தொடரில் நடராஜனுக்கு பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் அறிமுகம் ஆனவர் தான் உம்ரன் மாலிக். பின்பு 2021ஆம் டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் வலை பயிற்சி செய்யும் பவுலராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முக்கியமான காரணம் அவரது வேகம் தான்.

சாஹீர் கானுக்கு பிறகு அதிக வேகமாக வீசும் வீரராக தான் இப்பொழுது உம்ரன் மாலிக் இருக்கிறார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆசிஷ் நெஹ்ரா கூறுகையில் : ” எந்த சந்தேகமும் வேண்டாம், நிச்சியமாக இந்திய அணியில் எதிர்காலம் இவர் (உம்ரன் மாலிக்) தான். நான் சமீபத்தில் நடந்து முடிந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரை வைத்து மட்டும் சொல்லவில்லை. அனைவரும் அவரது பவுலிங்-ஐ பார்த்து ஆச்சரியப்படுவது உண்டு. அதுவும் குறிப்பாக அவரது வேகம்.”

“ஒரு சிலர் (உம்ரா மாலிக்) அவரால் நான்கு ஓவர் முழுவதும் பவுலிங் செய்ய முடியாது என்று சொன்னார். அவர் டி-20 போட்டியில் தான் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். ஆனால் இப்பொழுது 16 -18 மற்றும் 20வது ஓவரில் சுலபமாக பவுலிங் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி, வெறும் டி-20 போட்டிகளில் மட்டும் தான் இவரால் விளையாட முடியும் என்று அர்த்தம் கிடையாது. நிச்சியமாக அனைத்து விதமான போட்டிகளிலும் பட்டைய கிளப்புவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.”

“டி-20 போட்டி எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுமட்டுமின்றி, அதிகப்படியான வீரர்களும் டி-20 போட்டியில் விளையாடுவதில் தான் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அதனால் உம்ரன் மாலிக் அதிகப்படியான போட்டிகளில் விளையாடினால் நிச்சியமாக சிறந்த வீரராக திகழ்வார்.ஆனால் இந்திய அணியின் தேர்வாளர்கள் உம்ரன் மாலிக்-ஐ எப்படி பயன்படுத்த போகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு தேவையான ஒன்று என்று கூறியுள்ளார் ஆசிஷ் நெஹ்ரா.”

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய உம்ரன் மாலிக் 10 ஓவர் பவுலிங் செய்து 66 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 2 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular