உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெல்ல இவர் ஒருத்தரே போதும் ; ரசிகர்கள் நம்பிக்கை ;

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளனர். அதுமட்டுமின்றி இன்று இரவு 7 மணியளவில் கவுகாத்தியில் உள்ள பர்சபார மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் மற்றும் இந்திய அணியின் பேட்டிங் :

இதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணியின் கேப்டனான பவும முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய காரணத்தால் இந்திய அணி ரன்கள் குவிந்தன.

அதிரடியின் உச்சத்திற்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் வெறும் 3 விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 237 ரன்களை விளாசியுள்ளனர். அதில் கே.எல்.ராகுல் 57, ரோஹித் சர்மா 43, விராட்கோலி 49, சூர்யகுமார் யாதவ் 61, தினேஷ் கார்த்திக் 17 ரன்களை அடித்துள்ளனர்.

இலக்கு மற்றும் தென்னாபிரிக்கா அணியின் பேட்டிங் :

பின்பு 238 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையாமல் திணறிக்கொண்டு வருகின்றனர். தொடக்க வீரர் மற்றும் கேப்டனான பவும எந்த ரன்களையும் அடிக்காமல் விக்கெட்டை இழந்துள்ளார். 10 ஓவர் முடிவில் 70 ரன்களை அடித்த நிலையில் 3 விக்கெட்டை இழந்துள்ளனர். இன்னும் 10 ஒவேரில் 168 ரன்களை அடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர்.

இந்திய அணியின் நம்பிக்கை நாயகன்:

இன்னும் மூன்று நாட்களில் இந்திய அணியை சேர்ந்த 15 பேர் கொண்ட வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல போகின்றனர். ஏனென்றால் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதால். அதனால் பயிற்சி ஆட்டங்களில் விளையாட முன்பே செல்ல உள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்த முறை பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய கிரிக்கெட் டி-20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட போகின்றனர். அவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டரில் விளையாடும் அனைத்து வீரர்களும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 360 டிகிரி மன்னன் என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் தான். தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 50 ரன்களையும், இரண்டாவது போட்டியில் 22 பந்தில் 61 ரன்களையும் விளாசியுள்ளார்.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி வருகிறார் சூர்யகுமார் யாதவ். அதனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் நிச்சியமாக இந்திய அணிக்கு பலமாக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.