இந்திய மற்றும் நியூஸிலாந்து : நேற்று மதியத்துடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், லத்தம் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் மோதின.


அதில் 3 – 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியை வாஷ் -அவுட் செய்துள்ளது இந்திய. இதனை இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து விளையாடினால் நிச்சியமாக இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியில் வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
மூன்றாவது ஒருநாள் போட்டியின் விவரம் :
டாஸ் நியூஸிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 385 ரன்களை அடித்தனர். பின்பு 386 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டம் அமையவில்லை.


தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த நியூஸிலாந்து அணி 41.2 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 295 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வென்றுள்ளது இந்திய.
பட்டைய கிளப்பிய இளம் வீரர்:
23வயதான சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் பட்டைய கிளப்பி விளையாடி வந்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் 208, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 40* மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 112 ரன்களை அடித்துள்ளார் சுப்மன் கில்.
இந்திய அணியின் முக்கியமான பிரச்சனை முடிவுக்கு வந்ததா ?


சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டிகள், ஆசிய கோப்பை போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் தான் இருந்தது. தோல்விக்கு முக்கியமான காரணம் தொடக்க ஆட்டம் தான் என்று ரசிகர்கள் பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச போட்டிகளில் இஷான் கிஷான், ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சுப்மன் போன்ற வீரர்கள் தொடக்க வீரர்களாக விளையாடி வந்தனர். யார் தான் இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விளையாட போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் இடையே எழுந்தது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரின் தொடக்க ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. அதனால் இதே வீரர்கள் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.