புவனேஸ்வர் குமார் இடத்தை கைப்பற்ற போகும் இளம் வீரர் இவர் தான் ; ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் புவனேஸ்வர் குமார் விளையாடுவது சிக்கல் தான் ;

0

இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்க போகும் இரண்டாவது டி-20 லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர். இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

அதனால் இனிவரும் இரு போட்டிகளும் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி 208 ரன்களை அடித்தனர். அப்படி இருக்கும் நிலையில் பவுலிங் மிகவும் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் தோல்வியை பெற்றது இந்திய.

ஆமாம், அதிலும் முன்னணி பவுலர் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்கள் சரியாக பவுலிங் செய்யாத நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை பெற்றது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் புவனேஸ்வர் குமார் 52 ரன்களையும், ஹர்ஷல் பட்டேல் 49 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர்.

இன்னும் சில தினங்களில் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் இந்திய அணியின் பவுலிங் மோசமான நிலையில் இருப்பது கவலையாக உள்ளது. அதுவும் குறிப்பாக புவனேஸ்வர் குமார் பவுலிங். இந்திய அணியின் ஸ்விங் கிங் என்று அழைக்கப்படும் புவனேஸ்வர் குமார் கடந்த மூன்று , நான்கு போட்டிகளில் மோசமான நிலையில் பவுலிங் செய்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக டெத் ஓவரில் மோசமான நிலையில் பவுலிங் செய்து வருவது இந்திய அணியிக்கு பின்னடைவு தான். புவனேஸ்வர் குமார் கடந்த நான்கு டெத் ஓவரில் பவுலிங் செய்து எந்த விக்கெட்டையும் கைப்பற்றதா நிலையில் 63 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். ஆனால், அதேநேரத்தில் இளம் வீரரான அர்ஷதீப் சிங் கடந்த நான்கு டெத் ஓவரில் பவுலிங் செய்து 3 விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் 34 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.

அதனால் இனிவரும் போட்டிகளில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக அர்ஷதீப் சிங் இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியில் புவனேஸ்வர் குமாரின் பவுலிங் பெரிய அளவில் எடுபடவில்லை என்பது தான் உண்மை.

ஆசிய கோப்பை போட்டியிலும் பவுலிங் சரியாக இல்லாதது தான் தோல்விக்கு முக்கியமான காரணமாக உள்ளது. ஏனென்றால், பும்ரா அந்த நேரத்தில் காயம் காரணமாக விளையாடவில்லை. ஆனால் இன்றைய இரண்டாவது டி-20 போட்டியில் ஜஸ்பிரிட் பும்ரா நிச்சியமாக விளையாடுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here