வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாளை மற்றும் டி-20 தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று முடிந்தது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய.


அதனை தொடர்ந்து இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் முதல் போட்டி நேற்று முன்தினம் தான் நடந்து முடிந்துள்ளது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி வேறுவழியில்லாமல் களமிறங்கிய இந்திய அணி அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட தொடங்கினார். ஆனால் அவரை அடுத்து களமிறங்கிய வீரர்கள் சரியாக பார்ட்னெர்ஷிப் செய்யாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர்.
இருப்பினும் இறுதிவரை அதிரடியாக விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 190 ரன்களை அடித்தனர். பின்பு 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. தொடக்கத்தில் இருந்து பார்ட்னெர்ஷிப் அமையாமல் விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர்.


இறுதிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 122 ரன்களை அடித்த நிலையில் 8 விக்கெட்டை இழந்தனர். அதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்திய. இப்பொழுது டி-20 போட்டிக்கான தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.
இரண்டாவது டி-20 போட்டிகள் நாளை இரவு நடைபெற உள்ளது. அதில் நிச்சியமாக ஒரு சில ,மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இன்னும் சில இரு மாதங்களுக்கு பிறகு ஐசிசி டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் உலகக்கோப்பை போட்டியில் வீரர்களை தேர்வு செய்ய இதுவே சரியான தருணம்.
அதில் நிச்சியமாக ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற வாய்ப்பு குறைவு தான். ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஐயர் எப்பொழுது சுழல் பந்து வீச்சாளர்களின் பவுலிங்கில் தான் அதிகமாக ரன்களை அடித்துள்ளார். அதேநேரத்தில் [பவுன்சர் அல்லது வேகப்பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை எதிர்கொள்ள கஷ்டப்பட்டு கொண்டு வருகிறார்.


ஆமாம், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் தான் ஐசிசி டி-20 2022 உலகக்கோப்பை பிடோடிகள் நடைபெற உள்ளது. அதுவும் ஆஸ்திரேலியா பிட்ச்-ல் வேகப்பந்து வீச்சாளருக்கு தான் சாதகமாக இருக்கும். அதுமட்டுமின்றி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் விளையாடிய ஐயர் ஒரு ரன்களை கூட அடிக்காமல் ஆட்டம் இழந்தார்.
அதனால் அவருக்கு பதிலாக தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் தீபக் ஹூடா சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, அவ்வப்போது பவுலிங் செய்தும் வருகிறார். அதனால் ஸ்ரேயாஸ் ஐயரை காட்டிலும் தீபக் ஹூடாவிற்கு தான் வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.