இந்த உலகக்கோப்பை போட்டியில் பும்ராவிற்கு பதிலாக இவர் சரியாக இருக்கமாட்டார் ; சுரேஷ் ரெய்னா ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் : இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகளில் எப்படியாவது வெல்ல வேண்டுமென்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளனர். ஆமாம், சமீப காலமாகவே இந்திய அணியின் விளையாட்டில் முன்னேற்றும் அடைந்துள்ளது தான் உண்மை.

ஆமாம், குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த மற்ற அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தொடர்களை வென்று வருகின்றனர். ஆனால் உலகக்கோப்பை , ஆசிய கோப்பை போன்ற போட்டிகளிலும் மட்டும் இந்திய அணி சொதப்பி வருகிறது தான் உண்மை.

ஆமாம், சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த முறை உலகக்கோப்பை போட்டியை இந்திய அணி வெல்லுமா என்ற குழப்பமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்திய அணியில் நடைபெற்ற முக்கியமான மாற்றம்:

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சீரியஸ் போட்டிகளில் விளையாட பயிற்சி மேற்கொண்டு இருந்த நேரத்தில் இந்திய அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரிட் பபும்ராவிற்கு காயம் ஏற்பட்டது. அதனால், உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற்ப்பட்டார். பின்பு அவருடைய இடத்திற்கு யார் வர போகிறார் என்று பல குழப்பம் எழுந்தது.

அதில் முகமத் ஷமி மற்றும் தீபக் சஹார் போன்ற இருவரின் பெயர் அதில் இடம்பெற்றது. ஆனால், தீபக் சாருக்கும் காயம் ஏற்பட்ட காரணத்தால் காத்திருப்பு பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார் தீபக். அதனால் உடனடியாக முகமத் ஷமி தான் பும்ராவிற்கு பதிலாக இந்திய அணியில் விளையாட போகிறார் என்று கூறியுள்ளது பிசிசிஐ.

பும்ராவிற்கு சரியான மாற்றம் முகமத் ஷமி ஆ ?

இதுவரை வெறும் 17 சர்வதேச டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஷமி பவுலிங் எந்த அளவிற்கு இருக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் பும்ரா இதுவரை 57 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதனால் பும்ராவிற்கு பதிலாக சரியான மாற்றமாக முகமத் ஷமி இருக்க வாய்ப்பு இல்லை.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா அவரது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் “நிச்சியமாக பும்ராவிற்கு சரியான மாற்றமாக முகமத் ஷமி இருக்கவே முடியாது. அதுமட்டுமின்றி பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களுக்கு சரியான மாற்று வீரர்கள் யாருமே இருக்க முடியாது. ஏனென்றால் இவர்கள் இருவரும் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி அவர்களது பங்களிப்பை காட்டி வருகின்றனர்.”

“இருப்பினும் இப்பொழுது இருக்கும் நிலையில் முகமத் ஷமி , ஷர்டுல் தாகூர், சிராஜ் போன்ற வீரர்களில் ஷமி சிறந்த தேர்வு தான். அதுமட்டுமின்றி, 15 நாட்கள் முன்பே இந்திய அணியை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி பயிற்சியை தொடங்கியுள்ளனர். அதனால் வரும் போட்டிகளில் எந்த பயமும் இல்லாமல் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here