இறுதி போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணியின் முக்கியமான மூன்று வீரர்கள் இவர்கள் தான் ;

0

தொடர் போட்டிகள் :

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இரு போட்டிகளில் 2 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட்கோலி, பும்ரா போன்ற வீரர்கள் விளையாடாத காரணத்தால் இந்த தொடரை ஷிகர் தவான் தான் வழிநடத்தி வருகிறார். நாளை இரவு இறுதி ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது, அதில் இந்திய அணி வென்றாலும் சரி தோல்வியை சந்தித்தாலும் ஒரு பிரச்சனையும் இல்லை.

அதனால் நாளை நடைபெற உள்ள போட்டியில் நிச்சியமாக போட்டியில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் எப்பொழுது தொடரை கைப்பற்றிய பிறகு நிச்சியமாக அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும்.

அதேபோல தான் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் மற்றும் அர்ஷதீப் சிங் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமே இளம் வீரர்கள் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அப்படி இருக்கும் நிலையில் இளம் வீரர்களுக்கு அவ்வப்போது வாய்ப்புகளை வழங்கி வருகிறது பிசிசிஐ. அதனால் நாளை நடைபெற உள்ள இறுதி ஒருநாள் போட்டியில் பல மாற்றங்கள் நடைபெறும்.

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச அணியின் விவரம் :

ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்சர் பட்டேல், ஷர்டுல் தாகூர், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், அவேஷ் கான்.

இதில் நிச்சியமாக சூர்யகுமார் யதாவுக்கு பதிலாக இஷான் கிஷான் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் நடந்த முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரு போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. டி-20 போட்டியை காட்டிலும் ஒருநாள் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார். அதனால் நிச்சியமாக இவரை வெளியேற்ற வாய்ப்பு உள்ளது.

இறுதி ஒருநாள் போட்டியில் யார் இடம் பெற வேண்டும் ? யாருக்கு வாய்ப்பு கொடுத்தால் அது சரியாக இருக்கும் என்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here