இனி இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இவர்கள் தான் ; உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ;

0

இந்திய கிரிக்கெட் அணி, வெவ்வேறு அணிகளை கொண்டு தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருகின்றனர். ஆமாம், அதனால் தான் இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்துள்ளது பிசிசிஐ. அதனால் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி விளையாடி தொடரை கைப்பற்றியுள்ளது.

அதனை தொடர்ந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் டி-20 லீக் போட்டிகள் நாளை இரவு 8 மணி முதல் நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டியில் வாஷ் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி டி-20 போட்டிக்கான தொடரையாவது கைப்பற்றுமா ?

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை நடைபெற உள்ள முதல் டி-20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தலைமை தாங்கி வழிநடத்த உள்ளார். இருப்பினும் இந்திய அணியின் தொடக்க வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்பொழுது போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் முக்கியமான ப்ளேயிங் 11ஐ வைத்துதான் இந்திய கிரிக்கெட் விளையாட உள்ளனர். இதுவரை இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷான், கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் தான் விளையாடி வந்தனர்.

இதில் இளம் வீரரான இஷான் கிஷான் இப்பொழுதெல்லாம் போட்டிகளில் சரியாக விளையாடுவதே இல்லை. அதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் அவ்வப்போது தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வந்தார். ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவராலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் நிச்சியமாக ரோஹிட் சர்மா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் தான் போட்டியின் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. எப்பொழுதும் 6வதாக அல்லது 7வதாக களமிறங்கி விளையாடி வந்த ரிஷாப் பண்ட் எப்பொழுது அதிரடியாக விளையாடி ரன்களை அடிப்பார்.

ஆனால் இப்பொழுது அந்த இடத்திற்கு ஹர்டிக் பாண்டிய மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார். அதனால் நிச்சியமாக இனிவரும் போட்டிகளிலும் , உலகக்கோப்பை போட்டிகளிலும் இந்திய அணியின் துவக்க வீரராக ரோஹித் சர்மா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டி-20 போட்டியில் ரிஷாப் பண்ட் தான் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார். அதில் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை அடிக்கவில்லை என்றாலும், நிச்சியமாக அவரால் சிறப்பாக பேட்டிங் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் வேண்டுமென்றால் யார் யார் பேட்டிங் செய்ய வேண்டும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here