CSK அணியின் தொடக்க வீரர்கள் இவங்க தான் ; இதில் மாற்றமே கிடையாது ; CSK ரசிகர்கள் மகிழ்ச்சி :

0

ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

சமீபத்தில் தான் அனைத்து அணிகளும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரத்தையும், தக்கவைத்துக்கொள்ளாத வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் பலர் எதிர்பார்த்த வகையிலும், பல வீரர்கள் எதிர்பாராத வகையிலும் வெளியேற்றியுள்ளனர். குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி கேப்டனையே (கேன் வில்லியம்சன்) ஐ வெளியேற்றியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்ற அணியாக இருக்கட்டும், அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2008 தொடங்கிய காலத்திலிருந்து மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, இதுவரை நடந்து முடிந்த 15 சீசன்களில் மொத்தம் 4முறை கோப்பையை வெண்றுள்ளது சென்னை.

சமீபத்தில் தான் ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலத்தில் அணியில் இருந்து வெளியேற்றிய வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது சென்னை. அதில் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராபின் உத்தப்பா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தான் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகின்றனர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றினார். அதனால் சென்னை அணியின் நம்பிக்கை நாயகனாக மாறியுள்ளார்.

அப்போ இந்த ஆண்டு யார் சென்னை அணியில் தொடக்க வீரர் ?

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரரான டேவன் கான்வே ஆகிய இருவரும் தான் தொடக்க வீரராக களமிறங்கி விளையாட உள்ளனர். கடந்த ஆண்டு ஏலத்தில் 1 கோடி விலைக்கு வாங்கியது சென்னை. ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடிய டேவன் கான்வே -விற்கு பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்-ன் பங்களிப்பு பெரிய அளவில் இல்லாவிட்டாலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தக்கவைக்கப்பட்ட வீரர்களில் யார் தொடக்க வீரராக விளையாடினால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்து என்ன ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here