நிச்சியமாக இவரால் இந்திய அணி ஆசிய போட்டிகளில் வெல்லும் ; அதற்கு தான் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார் ; கே.எல்.ராகுல் பேட்டி ;

0

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஆசிய கோப்பை 2022 போட்டிகள் இன்று இரவு முதல் தொடங்க உள்ளது. இன்று நடைபெற உள்ள முதல் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கை அணியும் மோத உள்ளனர்.

இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். நாளை இரவு உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் பாகிஸ்தான் போன்ற இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணி வெல்லுமா ?

இந்திய அணி இப்பொழுது வலுவாக இருப்பது உறுதி தான். அதில் விராட்கோலி கடந்த சில போட்டிகளாக பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் தவித்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டியில் தான் விராட்கோலி இறுதியாக சதம் அடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து இதுவரை அதாவது மூன்று ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் தவித்து வருகிறார் விராட்கோலி. இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் விராட்கோலி பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாபே போன்ற அணிகளுக்கு இடையேயான தொடரில் விளையாடாமல் பயிற்சி செய்து வருகிறார்.

விராட்கோலி நிச்சியமாக ஆசிய கோப்பை 2022 போட்டிகளில் கம்பேக் கொடுப்பார் என்று பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுலிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

சமீபத்தில் விராட்கோலி இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த கே.எல்.ராகுல் கூறுகையில் ; ” மற்றவர்கள் (டேனிஷ் கனேரியா) சொல்லும் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாருக்கும் அவரவர் தனி கருத்து இருப்பது வழக்கம் தான்.”

“அதனால் எந்த வீரருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதிலும் விராட்கோலி போன்ற உலக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருக்கு நிச்சியமாக மக்கள் என்ன சொல்கிறார் என்பது அவரை பாதிக்காது. அவர் இப்பொழுது சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு விளையாடி வருகிறார். நான் காயம் ஏற்பட்ட நேரத்தில் வீட்டில் இருந்தபடி போட்டிகளை பார்த்தேன்.”

“அப்பொழுது விராட்கோலி சிறப்பாக தான் ஷாட்ஸ் விளையாடினார். அதில் நான் அவரது போரம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அங்கு ஒன்றும் இல்லை. இருப்பினும் நிச்சியமாக ஆசிய கோப்பை போட்டிகளில் அவரது நோக்கம் சரியாக இருக்கும். அவரது நோக்கம் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வெற்றிபெறுவது தான்.”

“அப்படி நினைத்தால் நிச்சியமாக நல்ல விஷயம் நடக்க போவது உறுதி தான். நாங்களும் அவரது பழைய போர்மிற்கு திரும்ப வர வேண்டுமென்று தான் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றோம். இந்திய வீரர்கள் யாரும் அவரை பற்றி கவலைப்படவில்லை. இதனை தாண்டி எங்களுக்கு உலகக்கோப்பை 2022 போட்டிகள் தான் மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் ஆசிய கோப்பை போட்டிகளில் நிச்சியமாக புதிய வீரர்கள் அவர்களை மேம்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.’

ஆசிய கோப்பை 2022 போட்டியில் ஆவது கம்பேக் கொடுப்பாரா விராட்கோலி ? நாளை இரவு 7:30 மணியளவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here