நேற்று மதியம் 3 மணியளவில் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றனர். அகில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது…!

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் (சுமன் கில் மற்றும் புஜாரா) ஆகிய இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டத்தை சிறப்பாக விளையாடவில்லை. தொடக்கத்திலேயே இரு விக்கெட்டை இழந்த காரணத்தால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது.
பின்பு களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, விராட்கோலி போன்ற விக்கெட்டை தொடர்ந்து கைப்பற்றியது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. அதனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறியது. ஆமாம், தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த இந்திய அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் போனது.

யாரும் எதிர்பாராத வகையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் மற்றும் ஆல் – ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் இணைந்து சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்தனர். அதனால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தனர். இதில் ரிஷாப் பண்ட் ஆட்டம் இழந்தாலும், ரவீந்திர ஜடேஜா இன்னும் விளையாடி வருகிறார்.
முதல் நாள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட்டை இழந்த நிலையில் 338 ரன்களை அடித்துள்ளனர். அதில் சுமன் கில் 17, புஜாரா 13, ஹனுமா விஹாரி 20, விராட்கோலி 11, ரிஷாப் பண்ட் 146, ஷ்ரேயாஸ் ஐயர் 15, ரவீந்திர ஜடேஜா 83, ஷர்டுல் தாகூர் 1 ரன்களை அடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியை எதிர்த்து மூன்று டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அதற்கான இந்திய அணியின் விவரத்தை நேற்று தான் பிசிசிஐ வெளியிட்டது. அதில் நட்சத்திர ஓப்பனிங் பேட்ஸ்மேன் அணியில் இடம்பெறாதது அதிர்ச்சியாக உள்ளது.

ஆமாம், இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கு சமீப காலமாக அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. பின்னர் அது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு தான் கே.எல்.ராகுல் அவரது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு நல்ல படியாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.
நான் இன்னும் சில மாதங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் நான் குணமடைந்து கொண்டு தான் வருகிறேன் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.”
இந்திய அணியில் இப்பொழுது சரியான ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்ய ஆட்கள் இல்லை என்பது தான் உண்மை. ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினாலும் அவருடன் பார்ட்னெர்ஷிப் செய்ய சரியாக வீரர் என்ற கேள்வி எழுந்துள்ளது. கே.எல்.ராகுல் இந்திய அணியில் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்புகள் உள்ளதா ?
0 Comments