ஐபிஎல் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யுப்பட்டுள்ளது…! ஐபிஎல் போட்டி நடக்குமா???

ஐபிஎல் 2021 வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் வீரர்களும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். எல்லா ஐபிஎல் வீரர்களும் அவரவர் அணியில் இணைந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் மும்பை இண்டிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி 2020 கொரோனா காரணமாக இந்தியாவில் நடத்த வேண்டாம் என்று பல சிக்கலான முடிவுகளுக்கு பின்னர் ஐக்கிய அரபு நாட்டில் நடத்த முடிவு செய்து வருகின்றனர். அப்பொழுது வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தி போட்டிகளை சிறப்பான முறையில் முடிந்துள்ளது.

இந்த ஆண்டும் கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகமாக இருப்பதால் இந்தியாவில் வெறும் 6 மைதானத்தில் மட்டும் போட்டியை நடத்த வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி ஐபிஎல் வீரர்கள் அவரவர் வீடுகளில் இருந்து ஐபிஎல் அணியில் இணையும் போது நிச்சியமாக 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்றும். பின்னர் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே மற்ற அனி வீரர்களுடன் இணைந்து விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல் -ரவுண்டர் அக்ஸார் படேல் கடந்த 28ஆம் தேதி மும்பையில் உள்ள டெல்லி அணியில் இணைந்தார். அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தது. ஆனால் மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்துள்ளதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வீரர்கள் குழப்பத்தில் உள்ளனர். அக்ஸார் பட்டேலை நாங்கள் தொடர்ந்து கவனித்து கொண்டு வருகிறோம். அவர் கூடிய விரைவில் குணமடைவார் என்று டெல்லி அணியின் உரிமையாளர் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செய்தி கொடுக்கும் ஒருநபருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவிட்டது. இதனையடுத்து சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ.காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபரும் சிஎஸ்கே அணியின் வீரர்களும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் நிம்மதியாக இருக்கின்றனர்.

வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி அணி எதிர்கொள்ள போகிறது. இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் மற்றும் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆவர்.