தோனி இந்திய அணியில் இல்லாததால், இவர் காணாமல் போய்விட்டார்..!! வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் வீரர் !! யார் அது தெரியுமா ???

நம்ம தல தோனி கடந்த ஆண்டு 2020, செப்டம்பர் மாதம் அவர் சர்வதேச போட்டியில் இருந்து விலகினார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தோனி இந்திய அணியில் இருந்து விலகிய போது , சூழல் பந்து வீச்சாளர்கள் மிகவும் வேதனையுடன் இருக்கின்றனர்.

ஏனென்றால் தோனிக்கு ஸ்டும்ப் பின்னால் நிற்கும்போது பேட்ஸ்மேனுடைய ஆசைவு தோனிக்கு நன்கு தெரியும். அதனால் சூழல் பந்து வீசினால் சுலமாக விக்கெட் எடுத்துவிடுவார். ஆனால் தோனிக்கு பிறகு ரிஷாப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் தோனி போல இல்லை. அதனால் சூழல் பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் கடினப்பட்டனர்.

அதில் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டது குலடீப் யாதவ். தோனி இந்திய அணியில் இருந்து விலகிய பிறகு ஸ்டும்ப் பின்னால் இன்று விக்கெட் எடுக்க முடியவில்லை. அதனால் கடந்த ஒரு ஆண்டுகளாக குலடீப் யாதவ் சரியான நேரத்தில் விக்கெட் எடுக்காததால், இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு குறைந்து விட்டது.

சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பௌலிங் செய்த குலடீப் யாதவ் , இரண்டாவது போட்டியில் 9 ஓவர் பந்து வீசி 68 ரன்களை கொடுத்துள்ளார். மூன்றாவது போட்டியில் 10 ஓவர் வீசிய குலடீப் 84 ரன்களை கொடுத்துள்ளார். ஆனால் இரு போட்டிகளில் சேர்த்து ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. அதனால் இவருக்கான வாய்ப்பு குறைந்து கொண்டு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

வருகின்ற ஐபிஎல் 2021 போட்டிகளில் ஒருவேளை சிறப்பான முறையில் பவுலிங் செய்தால் , வருகின்ற டி-20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.