இவர் நிச்சியமாக CSK அணியில் தான் இருப்பார் ; அதனால் கவலைப்படவேண்டாம் ; இவர் இல்லாமல் எப்படி ; தோனி ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த டி-20 போட்டி எது கேட்டால் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் தான்.

ஐபிஎல் டி-20 லீக் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் போட்டிகள். குறைவான ஓவர் கொண்ட போட்டி என்ற காரணத்தால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். அதனால் இப்பொழுது என்ன தடை வந்தாலும் ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது ஐபிஎல் போட்டிகள்.

இதுவரை வெற்றிகரமாக 15 சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் 16வது சீசனுக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் எந்த அணியில் யாரை வெளியேற்றிவிட்டு யாரை கைப்பற்ற போகிறார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது தான் உண்மை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் அதிக முறை ப்ளே- ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அதுமட்டுமின்றி,ஐபிஎல் தொடங்கிய ஆண்டு முதல் கடந்த ஆண்டு இறுதி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி, இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளனர். மகேந்திர சிங் தோனி சென்னை அணியில் விளையாடி வருவதால் ரசிகர்களின் கவனம் முழுவதும் சென்னை அணி மேல் தான் இருக்கும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சர்ச்சை :

இதையும் படியுங்க ; இந்திய கிரிக்கெட் அணியை வென்றால் நான் ஜிம்பாபே அணி வீரரை திருமணம் செய்து கொள்கிறேன் ; நடிகை ஓபன் டாக் ;

41வயதான மகேந்திர சிங் தோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். அதனால் இன்னும் சில ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தோனி அடுத்தது சென்னை அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது..!

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கும் இரு தினங்களுக்கு முன்பு ரவீந்திர ஜடேஜா தான் கேப்டன் என்று அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால் ஜடேஜா தலைமையிலான சென்னை அணி மோசமான நிலையில் தோல்வி பெற்ற காரணத்தாலும், ஜடேஜாவின் தனிப்பட்ட விளையாட்டிலும் குறை ஏற்பட்டுள்ளதாலும் உடனடியாக மீண்டும் தோனியை கேப்டனாக அறிவித்தது சென்னை அணி.

ஜடேஜா இந்த ஆண்டு ஏலத்தில் பங்கேற்க போகிறாரா ? இல்லையா ?

கடந்த ஐபிஎல் 2022 தொடக்கத்தில் ரவீந்திர ஜடேஜாசரியாக 10 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதாக சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தனர். அதற்கு இன்னும் நான் 10 ஆண்டுகள் சென்னை அணியில் தான் இருப்பேன் என்று பதிவு செய்திருந்தார் ஜடேஜா.

ஆனால் சமீபத்தில் அந்த பதிவை டெலீட் செய்தது ரசிகர்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை ஜடேஜா நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேறிவிடுவாரா ? என்று பல யோசனைகள் எழுந்தன. ஆனால் அதற்கு முற்றுக்கு புள்ளிவைக்கும் வகையில் தோனி சில தகவலை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் “சென்னை அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜாவை வெளியேற்ற முடியாது என்று தோனி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என்று கூறியுள்ளனர்…! இந்திய அணியின் முக்கியமான ஆல் -ரவுண்டராக திகழும் ரவீந்திர ஜடேஜா மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக விளையாடுவாரா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here