HomeTrending Newsதோனி சொன்ன அந்த ஒரு விஷயம் எனக்கு இப்பொழுது நியபகத்திற்கு வருகிறது ; அவர் சொன்னது...

தோனி சொன்ன அந்த ஒரு விஷயம் எனக்கு இப்பொழுது நியபகத்திற்கு வருகிறது ; அவர் சொன்னது சரி தான் ; தோனியை பற்றி பேசிய விராட்கோலி ;

முன்னாள் கேப்டனை பற்றி சமீபத்திய இந்திய அணியின் கேப்டனான விராட்கோலி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் தோனி. ஆனால் அதற்கு முன்பே தோனிக்கு அடுத்த படியாக விராட்கோலி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். ஆனால் வேலை பளு அதிகம் உள்ளதால் டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

பின்னர் பிசிசிஐ-யின் அதிரடி முடிவால் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக இருந்துள்ளார் விராட்கோலி. ஆனால் அவருக்கே சொல்லாமல் ரோஹித் சர்மாவை டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக பதவி ஏற்றுள்ளார் ரோஹித். அதனால் விராட்கோலி வெறும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக தொடர்ந்து வருகிறார்.

சமீபத்தில் விராட்கோலி அளித்த பேட்டியில் ; நானும் தோனியும் அடிக்கடி நிறைய விஷயங்கள் பேசுவது வழக்கம். அதில் அவர் பல அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு முக்கியமான விஷயம், ஒரு தவறை தொடர்ந்து 7 அல்லது 9 மாதங்கள் தொடர்ந்து செய்தால் மட்டுமே இந்த கிரிக்கெட் போட்டியில் சமாளித்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார் விராட்கோலி.

இப்பொழுது விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் டீன் எல்கர் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மூன்று டெஸ்ட் தொடர் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணியும் வென்றுள்ளது. அதனால் 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

நாளை மதியம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் பலமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, இதுவரை இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் ஒருமுறை கூட டெஸ்ட் போட்டிக்கான தொடரை கைப்பற்றியதே இல்லை. இந்திய அணி வெற்றி பெறுமா ? சாதனையை படைக்குமா இந்திய அணி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img