ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றியை கைப்பற்றிய அணிகளுள் முதல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அதேபோல, கடந்த 14 ஆண்டுகளில் தொடர்ந்து சிஎஸ்கே அணியை வழிநடத்துவது மகேந்திர சிங் தோனி தான் என்று அனைவருக்கும் தெரிந்து ஒன்று.
அதில் சிஎஸ்கே அணியில் சீனியர் வீரரான தோனி மற்றும் டுப்ளஸிஸ் ஆகிய இருவருக்கும் அருமையான நட்பு உள்ளது என்று சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் டுப்ளஸிஸ் மற்றும் தோனிக்கு இடையேயான நட்பை பற்றி சில முக்கியமான தகவலை கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2021 போட்டிகளில், இதுவரை விளையாடிய 7போட்டிகளில் 5 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளது.
தோனி மற்றும் டுப்ளஸிஸ் ஆகிய இருவருக்கும் இடையே சிறப்பான நட்பு இருந்துள்ளது. அவர்கள் இருவரும் எப்பொழுதும் ஏதாவது ஒரு காரணத்துக்காக குறைந்தது இரண்டு மணிநேரம் பேசி கொண்டு இருப்பார்கள் என்று ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
எப்பொழுதும் பயிற்சி செய்யும் நேரத்தில் அவர்கள் நீண்ட நேரம் ஏதாவது பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். நெறைய முறை டுப்ளஸிஸ் -யிடம் தோனி பல முறை அறிவுரையை கேட்டுள்ளார் என்று ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, இப்பொழுது இருக்கும் சிஎஸ்கே அணியின் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுப்ளஸிஸ் ஆகிய இருவரும் இணைந்து சிஎஸ்கே அணிக்கு சிறப்பான ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக இருந்துள்ளனர்.
25 வயதான ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2021 ஏழு போட்டிகளில் 196 ரன்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி, அதிகபட்சமாக 75 ரன்களை அடித்துள்ளார். அதில் இரு அரைசதம் அடங்கும்.