ஐபிஎல் 2021: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்றால் அது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் தான். கடந்த 2008ஆம் அன்று ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் 2021 கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஆரம்பித்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐபிஎல் வீரர்கள் சிலருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதியானது. அதனால் உடனடியாக ஐபிஎல் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அணைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு வழி அனுப்பிவைத்தனர். பின்னர் மீதமுள்ள போட்டிகளை எப்பொழுது நடக்கும் என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கு பதிலளித்த பிசிசிஐ வருகின்ற செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள போட்டிகள் நடைபெறும் என்றும், அதுவும் இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றியை கைப்பற்றிய அணிகளுள் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் 2008 ஆம் தொடக்கத்தில் இருந்து இப்பொழுது வரை மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக உள்ளார். இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு தான் சிஎஸ்கே அணிக்கு மறக்கமுடியாத ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் இதுவரை எல்ல ஆண்டுகளிலும் சிஎஸ்கே அணி ப்ளே -ஆஃப் சுற்றுக்குள் தகுதிபெற்றுள்ளது. ஆனால் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு 2020 தான் மோசமாக போய்விட்டது.
ஆனால் அதற்கு எதிர்மாறாக இந்த ஆண்டு இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில உள்ளது சிஎஸ்கே அணி. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
சமீபத்தில் சிஎஸ்கே அணியின் ஆல் -ரவுண்டர் மற்றும் இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரரான மொயின் அலி அளித்த பேட்டியில் தோனியை பற்றி சில கருத்துக்கள் கூறியுள்ளார். அதில் தோனி தான் என்னை சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய சொன்னார்.
அதனால் எனக்கும் அது சாதகமாக அமைந்துவிட்டது. அவரது பேச்சு எனக்கு நம்பிக்கையை கொடுத்தது என்று கூறியுள்ளார் மொயின் அலி. எப்பொழுதும் சிஎஸ்கே அணியில் 3வதாக சுரேஷ் ரெய்னா தான் பேட்டிங் செய்வார். ஆனால் மொயின் அலி சிஎஸ்கே அணியில் இடம்பெற்றதால், அந்த இடத்தில் மொயின் அலியை பேட்டிங் செய்ய சொன்னார் தோனி.
மகேந்திர சிங் தோனியின் அனுபவத்தில் யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தோனிக்கு நன்கு தெரியும். இதுவரை 6 போட்டிகளில் பேட்டிங் செய்த மொயின் அலி 206 ரன்களை எடுத்துளளார். அதில் அதிகபட்சமாக 58 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.