தோனி சொன்னதால் தான் இவரை CSK அணியில் வைத்திருக்கிறோம் ; சிஎஸ்கே நிர்வாகம் பேட்டி :

உலகக்கோப்பை போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான பேச்சு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் டிசம்பர் 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக பிசிசிஐ தகவலை வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

மற்ற அணிகளை விட சென்னை அணியில் யார் யார் விளையாட போகிறார்கள் என்பதை பற்றி தெரிந்துகொள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதேபோல தான் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஏலமும். அதுமட்டுமின்றி, நேற்று மாலை சென்னை அணி தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளனர்.

அதில் மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மஹீஸ் தீக்ஷண, சோலங்கி, தீபக் சஹார், சிங், முகேஷ் சவுத்திரி, தேஷ்பாண்டே, மிச்சேல் சண்ட்னர், பிரிட்டோரியஸ், ராஜேவர்தன், மொயின் அலி, சேனாபதி, அம்பதி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளது சென்னை.

அதே சமையத்தில் ஒரு சில வீரர்களை வெளியிட்டுள்ளனர். அதில் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மிலன், ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, ஆசிப், நாராயண் ஜெகதீசன் போன்ற வீரர்களை அணியில் இருந்து வெளியேற்றியுள்ளது சென்னை அணி.

இதனை பற்றி பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO அணியில் இருந்து வெளியேற்றபட்ட வீரர்களை பற்றியும், தக்கவைக்கப்பட்ட வீரர்களை பற்றியும் பேசியுள்ளார். அதில் “ப்ராவோ அணியில் இடம்பெறாததற்கு முக்கியமான காரணம் வயது தான். அதுமட்டுமின்றி, இங்கிலாந்து வீரரான கிறிஸ் ஜோர்டான் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக தான் விளையாடினார். ஆனால் இந்தியாவில் நடைபெற உள்ள போட்டியில் அவரது பங்களிப்பு பெரிதாக இல்லை.”

“ஆடம் மிலன் வேகமாக தான் பவுலிங் செய்வார். ஆனால் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது. சென்னை அணிக்கு இன்னும் சரியான தொடக்க வீரர் அமையவில்லை, அதனால் தான் தமிழக வீரர்களான ஜெகதீசன், ஹரி நிஷாந்த் போன்ற வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார் காசி.”

அம்பதி ராயுடு-விற்கும் தான் அதிகமாக வயது ஆகிவிட்டது..! பிறகு அவர் மட்டும் ஏன் அணியில் இருக்கிறார் என்று கேள்விக்கு பதிலளித்த காசி கூறுகையில் ; ஆமாம், 37 வயதான அம்பதி ராயுடு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம். அதுமட்டுமின்றி தோனியும் நம்புகிறார் அதனால் அவரை தக்கவைத்துக்கொண்டோம் என்று கூறியுள்ளார் சென்னை அணியின் CEO காசி.”