கடந்த போட்டியில் தோனி செய்த புதிய சாதனை..! சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்… முழு விவரம் இதோ..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 போட்டிகள் சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளனர். அதன்விளைவாக ஐபிஎல் 2020யின் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறியது சிஎஸ்கே அணி.

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் விளையாடிய 4 போட்டியில் 3 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

கடந்த சிஎஸ்கே அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளனர். முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 220 ரன்கள் அடித்துள்ளனர்.

பின்பு 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இறுதிவரை போராடி 202 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது சிஎஸ்கே அணி.

அந்த போட்டியில் தோனி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணா, ராகுல் த்ரிப்தி மற்றும் ஈயின் மோர்கன் விக்கெட்டை கேட்ச் பிடித்ததால் தோனி 150 விக்கெட் கீப்பராக கேட்ச் பிடித்துள்ளார். தோனி தான் முதல் வீரர் இத்தகைய சாதனையை கைப்பற்றியுள்ளது.

வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி மதியம் 3 மணியளவில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள போகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றால் புள்ளிபட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றும்.