மைதானத்தில் தோனி செய்த வேலை….ரசிகர்கள் உற்சாகம்… வைரலாகும் வீடியோ!

0

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் 31- ஆம் தேதி அன்று மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

இதில் திரைப் பிரபலங்கள், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

நடப்பு சீசன் ஐ.பி.எல். தொடருக்கான முதல் போட்டியில், அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஐ.பி.எல். போட்டிகளுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், காயம் காரணமாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காவும் வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அடுத்தடுத்து விலகுவது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், தர்மசாலா உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி தலைமையில் ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயிற்சிக்கு நடுவே, தோனி பார்வையாளர்கள் அமரும் மஞ்சள் நிற கேலரிக்கு சென்று பெயிண்ட் ஸ்பிரேவை அடித்துள்ளார். அதேபோல், நீல நிற கேலரிக்கு சென்ற அவர், நீல நிற பெயிண்ட் ஸ்பிரேவை அடித்துள்ளார். அப்போது, அங்கிருந்த ரசிகர்கள் தோனி தோனி என்று கூறி ஆரவாரம் செய்தனர்.

இது குறித்த வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப்பக்கங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதேபோல், இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் பயிற்சியை ரசிகர்கள் இலவசமாக நேரில் காணலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுகின்றனர். குறிப்பாக, சென்னையில் 7 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here