நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்ற போட்டி ரஞ்சியில் உள்ள JSCA சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், சன்டனர் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட்அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது.
அதுமட்டுமன்றி, மிடில் ஆர்டரில் மிச்சேல் ஆட்டம் சிறப்பாக இருந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டையும் இழந்த நியூஸிலாந்து அணி 176 ரன்களை அடித்தனர்.

அதில் பின் ஆலென் 35, கான்வே 52, க்ளென் பிலிப்ஸ் 17, மிச்சேல் 59* ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது.
அதற்கு முக்கியமான காரணம் பார்ட்னெர்ஷிப் அமையாதது தான். தொடக்க வீரரான சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் ரன்களை அடிக்க முடியாமல் ஆட்டம் இழந்தனர். இருப்பினும் சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த இந்திய கிரிக்கெட் அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்த நிலையில் 155 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றுள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி.
அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது நியூஸிலாந்து அணி. மீதமுள்ள இரு போட்டிகளில் வென்று தொடரையும் வெல்லுமா ? இந்திய ?
தோனி தந்த வருகை :
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டனான மகேந்திர சிங் தோனி நேற்று நடந்த முதல் டி-20 போட்டியை நேரில் காண வந்துள்ளார். அதுவும் அவரது முகத்தை பார்க்கும்போது இன்னும் சின்ன பையன் போலவே தெரிகிறது. அதன் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.
0 Comments