CSK-ன் திக் திக் வெற்றிக்கு இவர் தான் காரணம்..! உண்மையை சொன்ன சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி…!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதுவரை 15 போட்டிகள் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. 15வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அதிரடியாக விளையாடிய 220 ரன்களை குவித்தனர்.

அதில் ருதுராஜ் கெய்க்வாட் 64 ரன்கள், டுப்ளஸிஸ் 95 ரன்கள், மொயின் அலி 25 ரன்கள், தோனி 17 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 6 ரன்களை எடுத்துள்ளனர். பின்பு 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிவரை போராடி 202 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டிக்கு பிறகு சிஎஸ்கே அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி 7வது உள்ளது.

போட்டி முடிந்த பிறகு வெற்றியை குறித்து பேசி சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ; இந்த போட்டி மிகவும் அற்புதமான ஒன்றுதான். 16வது ஓவருக்கு பிறகு பேட்மேன் மற்றும் பவுலர்களுக்கு இடையே பெரிய மோதல் இருந்தது. அந்த நேரத்தில் பீல்டிங் மாற்ற முடியாத நிலைமை.

இந்த மாதிரியான சூழ்நிலையில் வீரர்கள் அனைவரும் அமைதியாக தான் இதனை கையாள வேண்டும். சரியான நேரத்தில் ரசல் விக்கெட்டை கைப்பற்றினார் சாம் கரண். ஆனாலும் அதன்பிறகு சாம் கரண் மற்றும் தாகூர் தாறுமாறாக ரன்களை கொடுத்தனர்.

அந்த நேரத்தில் சூழல் பந்து வீச்சாளர் தான் எங்கள் கடைசி நம்பிக்கை. அவரது பந்து வீச்சால் சில ரன்களை நிதர்சமாக குறைத்தோம் என்று கூறியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர தோனி.