நேற்று நடைபெற்ற போட்டியில் 15வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் எந்த போட்டியிலும் அமையாத ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் இந்த போட்டியில் அமைந்துள்ளது. முதல் ஓவரில் இருந்து இறுதிவரை அதிரடியாக விளையாடிய சிஎஸ்கே விளையாடியுள்ளது.
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 220 ரன்களை எடுத்துள்ளனர். அதில் ருர்துராஜ் கெய்க்வாட் 64 ரன்கள், டுப்ளஸிஸ் 95 ரன்கள், மொயின் அலி 25 ரன்கள், தோனி 17 ரன்களை விளாசியுள்ளனர்.பின்பு 221 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை.
முதல் 6 ஓவரில் 5 விக்கெட்டை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தோல்வி என்று நினைத்து கொண்டு இருந்த போது ஆன்ட்ரே ரசல் மாற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய இருவரின் ஆட்டம் சிஎஸ்கே அணியை சோகத்தில் ஆழ்த்தியது.
சிஎஸ்கே அணியின் குட்டி குழந்தை என்று சொல்லப்படும் சாம் கரண் சரியான நேரத்தில் ஆன்ட்ரே ரசல் விக்கெட்டை கைப்பற்றினார். ஆனால் இறுதிவரை முயற்சி செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிஞ்சியது தோல்வியே.
போட்டி முடிந்த பிறகு ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி அளித்துள்ளார் அதில் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ; நான் மிகவம் சந்தோசமாக இருக்கிறேன். ஏனென்றால் முதல் மூன்று போட்டியில் என்னுடைய ஆட்டம் சரியாக அமையவில்லை. அதனால் விரைவாக விக்கெட்டை இழந்திருக்கேன்.
ஆனால் இன்றைய போட்டியில் நல்ல ரன்களை அடித்துள்ளேன். அதுமட்டுமின்றி தோனி, ஸ்டீபன் பிளெமிங் மற்றும் மைக்கல் ஹஸ்சி ஆகிய மூவரும் எனக்கு நல்ல ஒரு ஆதரவாக தான் இருக்கிறார்கள். நான் முதல் மூன்று போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை என்றாலும் என்னிடம் அவர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
அதுமட்டுமின்றி எப்பொழுதும் எனக்கு என்ன பிரச்னை அதனை எப்படி சரி செய்வது என்பதை பற்றி மிகவும் தெளிவாக அறிவுரையை சொல்வார்கள். அதுமட்டுமின்றி கடந்த போட்டியில் நான் சரியாக விளையாடவில்லை, போட்டி முடிந்த பிறகு ராபின் உத்தப்பா எனக்கு பல அறிவுரையை சொன்னார்.
இத்தகைய வீரர்களின் ஆதரவு இருப்பதை கண்டு எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் .