தோனி சொன்னது தான் சரி……!! தோனிக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்கள்..!!! அப்படி என்ன சொன்னார்…??

0

தோனி சொன்னது தான் சரி……!! தோனிக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்கள்..!!! அப்படி என்ன சொன்னார்…??

நடப்பு ஆண்டின் ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அரபு நாட்டில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதுவும் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் முதல் ஐபிஎல் போட்டி இதுவே ஆம். ஏனென்றால் கோரோணா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதால் இந்த முடிவு எடுத்துள்ளது பிசிசிஐ.

இதுவரை 41 போட்டிகள் சிறப்பாகவும் எந்த ஒரு தடங்களும் இல்லாமல் நடைபெற்று வருகிறது ஐபிஎல் 2020 டி20 லீக் போட்டி. கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 41வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பொள்ளார்ட் தலைமையிலான மும்பை இந்தின்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தின்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் மற்றும் டுபலஸிஸ் சரியான தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் ருதுராஜ் 0 ரன்கள் , டுபலஸிஸ் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். பவர்-ப்லே யில் 5 விக்கெட்டை பறிகொடுத்தது சிஎஸ்கே அணி.

நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்த நிலையில் வெறும் 114 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்கள். 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தின்ஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டிகாக் மற்றும் இஷான் கிஷான் இருவரும் சேர்ந்து ஆட்டம் இழக்காமல் 115 ரன்களை எடுத்து மும்பை அணியை வெற்றி பெற செய்தனர். சென்னை அணியை வீழ்த்தியதால் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது மும்பை அணி.

தோனி சொன்னது தான் சரி……!! தோனிக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்கள்..!!! அப்படி என்ன சொன்னார்…??

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மிகவும் வயதானவர்கள் என்று பல கிரிக்கெட் ரசிகர்களும் , விமர்சர்களும் கிண்டல் செய்து வந்தனர். தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதே இல்லை என்று பல குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை அதாவது விளையாடும் வேகம் இல்லை என்று கூறியதால் பல சர்ச்சையை ஏற்படுத்தியது. வாய்ப்பு கொடுத்தால் தான் தெரியும்.. முதலில் வாய்ப்பு கொடுங்கள் என்று சமுகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வந்த நிலையில். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மும்பை இந்தின்ஸ் க்கு எதிரான போட்டியில் ருதுராஜ் மற்றும் ஜெகதீசன் ஆகிய இரு இளம் வீரர்களை களம் இறக்கினார்.

ஆனால் எந்த பயனும் இல்லை ஏனென்றால் இதுவரை ருதுராஜ் 3 போட்டிகளில் விளையாடி வெறும் 0 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் தோனி சொன்னது சரிதான் இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று ஒப்புக்கொண்டனர் ரசிகர்கள். அதுமட்டுமின்றி சமுகவலைத்தளங்களில் ருதுராஜ் மற்றும் ஜெகதீசன் பற்றி கருத்து பகிர்ந்து வருகின்றன.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here