HomeIPLஎன்னதான் வெற்றி பெற்றாலும், இந்த தவறை தான் மறுபடியும் செய்து வருகிறோம் ; ரவீந்திர ஜடேஜா...

என்னதான் வெற்றி பெற்றாலும், இந்த தவறை தான் மறுபடியும் செய்து வருகிறோம் ; ரவீந்திர ஜடேஜா ஓபன் டாக் ;

நேற்று மும்பையில் உள்ள பட்டில் மைதானத்தில் நடைபெற்ற 22வது போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம்போல தொடக்கத்தில் சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. ஆமாம், ருதுராஜ் மற்றும் மொயின் அலி போன்ற இருவரும் தொடர்ந்து ஆட்டம் இழந்த நிலையில் சென்னை அணி முதல் 10 ஓவர் முடிவில் குறைவான ரன்களை மட்டுமே முடித்திருந்தது.

ஆனால், போக போக ராபின் உத்தப்பா மற்றும் ஷிவம் துபே போன்ற இருவரும் ரன்களை அடித்து தொம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடியதால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 216 ரன்களை அடித்துள்ளது சென்னை. அதில் ராபின் உத்தப்பா 88, மொயின் அலி 3, ஷிவம் துபே 95 போன்ற ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி. என்ன தான் தொடக்கத்தில் சரியாக பார்ட்னெர்ஷிப் அமையாமல் விக்கெட்டை இழந்து வந்தாலும், பின்பு அகமத், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களால் ரன்களை சரமாரியாக அடித்தது பெங்களூர் அணி.

இருப்பினும் இறுதி வரை போராடிய பெங்களூர் அணி 193 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதில் அனுஜ் ராவத் 12, மேக்ஸ்வெல் 26, அகமத் 41,பிரபுதேசாய் 34, தினேஷ் கார்த்திக் 34 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறுகையில் ; “முதல் வெற்றி என்றாலே அதில் பல சந்தோசங்கள் இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் முதல் நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் இன்றைய வெற்றி மிகவும் முக்கியமான ஒன்று.”

“ஒரு கேப்டனாக பெற்ற முதல் வெற்றியை நான் என்னுடைய மனைவி மற்றும் அணி வீரர்களுக்கு அர்ப்பணிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் இப்பொழுது ஒரு அணியாக நாங்க வென்றுள்ளோம். அனைவரும் சிறப்பாக தான் விளையாடினார்கள். இருப்பினும் ராபின் உத்தப்பா, மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவரும் அதிரடியான ஆட்டத்தை விளையாடியுள்ளனர்.”

“பவுலர்களும் அவரது வேலையை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். ஒரு கேப்டனாக எனக்கு யாரும் அழுத்தத்தை கொடுக்கவில்லை. நான் எப்பொழுதும் எனக்கு ஏதாவது பிரச்சனை உள்ளது என்றால் அணியில் இருக்கும் அனுபவம் வாய்ந்த வீரர்களிடம் பேசுவது வழக்கம்.”

“அதுமட்டுமின்றி, அணியில் தோனி உள்ளார், எனக்கு எந்த ஒரு சந்தேகம் மற்றும் பிரச்சனை இருந்தால் நான் நிச்சியமாக அவரிடம் பேசுவேன். எந்த சூழ்நிலையில் சரியாக விளையாட வேண்டும். நம்மை நமே ஆதரவித்து கொண்டே விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.”

இனிவரும் போட்டிகளில் சென்னை அணியின் மாஸ் கம்பேக் இருக்குமா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img