உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த 17ஆம் அன்று தொடங்கியுள்ளது. வருகின்ற 24ஆம் தேதி அன்று முதல் போட்டி விளையாட உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அதுவும் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. அதில் வெற்றி பெறுமா ?? இல்லையா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கான ஆலோசகராக தோனியை அறிவித்துள்ளது பிசிசிஐ. எப்பொழுதும் போட்டிகள் நடைபெறும் போது ஒரு வீரரை பற்றி இன்னொரு வீரர் பேசுவது வழக்கம். அதேபோல தான் இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் ஹார்டிக் பாண்டிய தோனியை பற்றி சில கருத்தை பதிவு செய்துள்ளார்.
தோனியை பற்றி பேசிய ஹார்டிக் பாண்டிய ; உண்மையை சொல்ல போனால் தோனியை போல, வேறு யாரையும் நான் பார்த்ததே கிடையாது. எனக்கு தோனி என்னுடைய சகோதரர் மாதிரி தான். எனக்கு எப்பொழுதெல்லாம் அவர் (தோனி) தேவையோ அவர் எனக்காக என்கூட இருந்துள்ளார் தோனி. அதனை நான் மதிக்குறேன் என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய. உலகக்கோப்பை போட்டிகளில் ப்ளேயிங் 11ல் ஹார்டிக் பாண்டியாவுக்கு இடம்கிடைக்குமா ?? என்ற கேள்விகள் எழுந்துள்ளது…!
ஏனென்றால் கடந்த ஆண்டு ஹார்டிக் பாண்டியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அவரால் சரியாக பவுலிங் மற்றும் பேட்டிங் செய்ய முடியவில்லை. அதுமட்டுமின்றி, ஹார்டிக் பாண்டிய பவுலிங் இந்திய அணிக்கு மிகவும் தேவையான ஒன்று. அதுமட்டுமின்றி, இவர் அதிரடியான பேட்ஸ்மேன் என்பதால் இவருடைய பங்களிப்பு இந்திய அணிக்கு தேவையாக இருக்கிறது.
சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சில ஓவர்கள் மட்டும் பவுலிங் செய்தார். அதன்பின்னர், நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டிகளில் பவுலிங் செய்யாத.. ஹார்டிக் பாண்டிய இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவது சிரமம் தான். ஒருவேளை பவுலிங் செய்தால் அதிகப்படியான வாய்ப்பு இருக்கும்.
கிரிக்கெட் ரசிகர்களே நீங்க சொல்லுங்க…! இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் ஹார்டிக் பாண்டிய இருக்க வேண்டுமா இல்லை வேண்டாமா ??? என்று COMMENTS பண்ணுங்க….!!!