ஐபிஎல் லீக் போட்டிகளில் அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணிகளுள் ஒரு சிறந்த அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அதில் எந்த சதேகமும் இல்லை. அதேபோல, ஐபிஎல் 2008ஆம் ஆண்டு தான் முதல் முதலில் ஆரம்பித்தது.
அதில் இருந்து இப்பொழுது வரை மகேந்திர சிங் தோனி தான் வழிநடத்தி வருகிறார். கிரிக்கெட் போட்டிகளில் ஒருசில வீரர்களுக்குள் நட்பு மலர்வது இயல்பு, அதில் மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரைனாவின் நட்பு என்று கூட சொல்லலாம்.
ஏனென்றால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தோனி அவரது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் சுரேஷ் ரெய்னாவும் அதே நேரத்தில் அவரது ஓய்வையும் அறிவித்தார். இதில் இருந்தே தெரிகிறது அவர்களுக்கு இடையே எந்த அளவில் நட்பு உள்ளது என்று.
சமீபத்தில் சின்ன தல சுரேஷ் ரெய்னா, சில முக்கியமான நிகழ்வை ஒரு டிவி தொலைக்காட்சியில் பகிர்ந்துள்ளார் ; முதல் முதல் ஐபிஎல் 2008ஆம் ஆண்டு ஏலத்தில் நான் இடம்பெற்றேன். ஆனால் எந்த அணியில் விளையாட போகிறேன் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாகவே இருந்தது.
நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட போவதாக தகவல் வந்தது. பின்பு நான் தோனியை பார்த்து நானும் நீங்களும் ஒரே அணிதான் என்று சொன்னேன். நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற உடனே அவர் என்னிடம் ” பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்” என்று கூறினார் தோனி.
அதுமட்டுமின்றி, எங்கள் அணியில் மெத்திவ் ஹைடேன், முரளிதரன், ஸ்டீபன் பிளெமிங் போன்ற வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தனர். தோனியுடன் சேர்ந்து நான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது எங்களுது நட்பை பெரிது படுத்த அது உதவியாக இருந்தது என்று குறியள்ளார் சுரேஷ் ரெய்னா.
இதுவரை சுரேஷ் ரெயின், ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை அடித்துள்ளார். அதில் 5491 ரன்களை 200 போட்டிகளில் அடித்துள்ளார், அதாவது ஸ்ட்ரைக் ரேட் 136.89 என்ற கணக்கில். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதி இறுதியாக 2018ஆம் ஆண்டு கோப்பையி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.