தோனி தவற விட்ட கேட்ச் – தீபக் சாகர் முகத்தில் ஏற்பட்ட கோபம்…! அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.
நேற்று நடந்த போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 171 ரன்களை அடித்துள்ளனர். அதில் வார்னர் 57 ரன்கள், பரிஸ்டோவ் 7 ரன்கள், மனிஷ் பாண்டே 61 ரன்கள், வில்லியம்சன் 26 ரன்கள், கெதர் ஜாதவ் 12 ரன்களை அடித்துள்ளனர். தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை என்றாலும்.
வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகிய இருவரும் இணைந்து சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை அதிக ரன்களை எடுக்க உதவி உள்ளனர். பின்பு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவரில் 173 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றினார்.
அதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 75 ரன்கள், டுப்ளஸிஸ் 56 ரன்கள், மொயின் அலி 15 ரன்கள், ஜடேஜா 7 ரன்கள் மற்றும் சுரேஷ் ரெய்னா 17 ரன்களை விளாசியுள்ளனர். அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சிஎஸ்கே அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி, 6 போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியதால் புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.
நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி பந்து வீசிய முதல் ஓவரில் தீபக் சாகர் வீசிய பந்தை சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் பேட்ஸ்மேன் பரிஸ்டோவ் எதிர்கொண்டார். அப்பொழுது பரிஸ்டோவ் அடிக்க முயன்ற போது, தோனிக்கு கேட்ச் -க்கு போனது.
ஆனால் அதனை தோனி தவற விட்டதால் தீபக் சாகர் முகம் கோவமாக மாறிவிட்டது. அதன் வீடியோ இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது ஒரு சாதாரணம் விஷயம் தான். ஏனென்றால் கேட்ச் பிடிக்காமல் போனால், எந்த பவுலர் ஆக இருந்தால் அதன் கோபம் இருக்கும்.
வீடியோ ;