Advertisement
HomeTrending Newsதோனி இதுவரை இப்படி செய்ததே கிடையாது ; ஆனால் விராட்கோலி அதை செய்துவிட்டார் ; அதனால்...

தோனி இதுவரை இப்படி செய்ததே கிடையாது ; ஆனால் விராட்கோலி அதை செய்துவிட்டார் ; அதனால் தான் தோல்வியே ; கம்பிர் பேட்டி

ஐசிசி உலகக்கோப்பை :

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதல் உலகக்கோப்பை டி-20 போட்டிகள் கொண்டு வருகிறது. வருகின்ற நவம்பர் 14ஆம் தேதியுடன் உலகக்கோப்பை டி-20 2021 போட்டிகள் நிறைவடைய உள்ளது. இந்த முறை ஐசிசி உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற வேண்டியது, ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது..!

இந்திய அணியின் தற்போதைய நிலைமை:

இதுவரை இந்திய அணி இரு போட்டிகளில் விளையாடி அதில் தோல்வியை பெற்றுள்ளது இந்திய அணி. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 10விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றுள்ளது.

இன்று இரவு 7:30மணியளவில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள போகிறது இந்திய அணி. இந்திய அணி வெற்றி பெறுமா ??

அரை இறுதி போட்டிக்கு இந்திய அணி தேர்வாகுமா ?

இதுவரை 2 போட்டிகளில் விளையாடி அதிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணி குரூப் Bயில் ஐந்தாவது இடத்தில் உள்ளது இந்திய அணி. முதல் இரு அணிகள் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெரும். ஆனால் நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் போட்டிபோட்டு இருக்கின்றனர்.

அதனால் இந்த முறை உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அரை இறுதி தகுதி பெறுவது சந்தேகம் தான்…!

இது தோனியுடைய முடிவாக இருக்காது ; விராட்கோலி தான் இப்படி செய்திருப்பார் ; கவுதம்

சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் அளித்த பேட்டியில் ; விராட்கோலி, இந்திய அணியை வழிநடத்திய விதம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏனென்றால் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட்கோலி இந்திய அணியில் சில வீரர்களை மாற்றினார்.

அதுமட்டுமின்றி, பேட்டிங் ஆர்டரையும் மாற்றினார். இதுதான் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இது உண்மையாக தோனியுடைய முடிவாக இருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் நான் தோனியுடன் பல போட்டிகளில் விளையாடியுள்ளேன். தோனி இந்த மாதிரி செய்ததே கிடையாது என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர்…!

விராட்கோலி இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மற்றும் வீரர்களை மாற்றியது சரியா ?? இல்லை தவறா ?? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular