ஐபிஎல் 2021 கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக சில வீரர்களுக்கு காரோண தோற்று இருப்பது உறுதியானது. அதனால் வேறு வழியில்லாமல் ஐபிஎல் 2021 போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வருகின்ற செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ. அதிலும் சில கட்டுப்பாடுகளுடன் ஐக்கிய அரபு நாட்டில் ரசிகர்கள் அனுமதிக்க படுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.
இதற்கிடையே சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளரான யுஸ்வென்ற சஹால் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனியை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அதனை பற்றி பேசிய சாஹல் ; நான் முதல் முதலில் ஐபிஎல் போட்டியில் போது மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் இடம்பெற்றேன். அதில் 2011ஆம் ஆண்டு முதல் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகம் ஆனேன். அப்பொழுது ரோஹித் சர்மா, என்னுடைய ரூம்க்கு வந்து என்னிடம் பேசினார்.
அதுமட்டுமின்றி எனக்கு போட்டிகளிலும் வாய்ப்பு கொடுத்தார் ரோஹித் சர்மா. அந்த நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பாஜன் மற்றும் பிராஜியன் ஓஜா ஆகிய இரு சூழல் பந்து வீச்சாளரும் அணியில் இருந்தனர். ஆனால் எனக்கும் வாய்ப்பு கொடுத்தார் ரோஹித்.
அதே மாதிரி தான் விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி, அவர்களுக்கு இளம் வீரர்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்று நன்கு தெறியும். இவர்கள் எப்பொழுது ஒரு வீரருக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் நிச்சியமாக உதவி செய்வார்கள். இதுதான் எல்ல அணிகளிலும் கேப்டனுக்கு இருக்க வேண்டிய நல்ல குணம் என்று கூறியுள்ளார் யுஸ்வென்ற சஹால்.