தோனியின் அறிவுரை எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது ; தமிழக வீரர் நடராஜன் ..! அப்படி தோனி என்ன சொன்னார் ?? முழு வீரம் இதோ…!

ஐபிஎல் ரசிகர்கள் தயாரா இருங்க.. நீங்க எதிர்பார்த்த ஐபிஎல் 2021 நாளை தொடங்க உள்ளது. அதனால அணைத்து ஐபிஎல் வீரர்களும் அவரவர் அணியில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் நிச்சியமாக விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியை இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம் .

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவுக்கு அபதிலாக ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியில் அறிமுகம் ஆன நட்ராஜன் தமிழகத்தை சேர்ந்தவர். அவரது யாக்கர் பந்தால் பல முக்கியமான விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஆம் ஆண்டு , 16 போட்டிகளில் விளையாடிய அவர் 16 விக்கெட் எடுத்துள்ளார். அறிமுகம் ஆன முதல் ஐபிஎல் சீசனில் அவரது திறமையை நிரூபித்து, சன்ரைசர்ஸ் அணியில் நிரந்தரமான இடத்தை பிடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி , ஐபிஎல் 2020 ஆம் ஆண்டு வீசிய சிறப்பான பந்து வீச்சால் ரசிகர்களின் மனதை மட்டுமின்றி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் மனதையும் கவர்ந்துள்ளார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் இடம் பெற்று அவரது முதல் போட்டியையும் விளையாடியுள்ளார் நட்ராஜன்.

சமீபத்தில் நட்ராஜன் அளித்த பேட்டியில் ; நான் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் போது நான் என்னுடைய முழு பங்களிப்பையும் கொடுத்துள்ளேன். நன் வீசிய பந்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சிக்சர் அடித்தார்.

அதற்கு பின்னர் நான் அவரது விக்கெட்டை கைப்பற்றிவிட்டேன். ஆனால் நான் அதனை கொண்டாடவில்லை, எப்படி அதற்கு முன்னாள் ஒரு சிக்சர் அடித்தார் என்று யோசனை செய்து கொண்டு இருந்தேன்.

அதன்பின்னர் நான் அவரை மற்ற வேறாகிலுடன் பேசுவது போல அவரிடமும் நான் பேசினேன். அப்பொழுது என்னுடைய உடல் பிட்னெஸ் பற்றிய என்னை ஊக்குவிக்கும் வகையில் அவர் என்னிடம் பேசினார். அதுமட்டுமின்றி சில ட்ரிக்ஸ் எங்கள சொல்லிக்கொடுத்தார் , அது எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் நட்ராஜன்.

சன்ரைசர்ஸ் அணிக்கு முதல் போட்டி வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.