என்னதான் கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், மகேந்திர சிங் தோனி அவ்வப்போது கேப்டனாக அணியை வழிநடத்துவது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.


இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி சென்னை அணிக்கு சற்று பின்னடைவை தான் ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் சென்னை அணி விளையாடிய முதல் நான்கு போட்டிகளில் தோல்வியை மட்டுமே கைப்பற்றி வருகின்றனர். ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின.
அதில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் டூப்ளஸிஸ் முதலில் பவுலிங் செய்ய போவதாக கூறினார். அதன்படி முதலில் களமிறங்க சென்னை அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. ஆனால் ராபின் மற்றும் ஷிவம் ஆகிய இருவரின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது.


அதனால் 20 ஓவர் முடிவில் 216 ரன்களை அடித்தது சென்னை. பின்பு, 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி இறுதி வரை போராடி 193 ரன்களை அடித்ததால் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை கைப்பற்றியது.
இதற்கிடையில், பெங்களூர் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விராட்கோலி மட்டும் அதிரடியாக விளையாட தொடங்கியிருந்தால் நிச்சியமாக சென்னை அணிக்கு ஆபத்தாக முடிந்திருக்கும். நல்ல வேலை 5வது ஓவரை சென்னை அணியின் முகேஷ் வீசினார்.


அதனை விராட்கோலி எதிர்கொள்ள தயாராக இருந்த நிலையில் விராட்கோலி அடிக்கும் இடத்தை யோசித்த தல தோனி உடனடியாக பீல்டிங் -ல் மாற்றம் செய்தார். முதல் பந்து வீசிய முகேஷ் , விராட்கோலியின் விக்கெட்டை தோனி நிற்க வைத்த பீல்டிங் பக்கத்தில் கேட்ச் பிடித்தார் ஷிவம் துபே.
— Addicric (@addicric) April 12, 2022
அதன்வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பவுலிங் செய்தால் , எப்படி பீல்டிங் வைத்தால் விக்கெட்டை கைப்பற்ற முடியும் என்று நன்கு தெரியும். இதனை ரவீந்திர ஜடேஜா விரைவாக கற்றுக்கொண்டால் மட்டும் தான் சென்னை அணியை இன்னும் சிறப்பாக வழிநடத்த உதவியாக இருக்கும்.
சென்னை அணிக்கு தோனி இருப்பது நல்லதா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!