தோனி இப்படி செய்தால் மட்டுமே சிஎஸ்கே அணியை வழிநடத்த முடியும், அப்படி இல்லைனா அவ்ளோதான் ; கவுதம் கம்பிர்
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 சில தினங்களுக்கு முன்பு ஆரம்பித்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெறாமல் போய்விட்டது. அதுவே முதல்முறை ஐபிஎல் வரலாற்றில் அவ்வாறு நடந்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மற்றுமின்றி சிஎஸ்கே அணியின் வீரர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் நிச்சியமாக சிஎஸ்கே அணி காம் பேக் தரும் என்று நினைத்த ரசிகர்களின் கணிப்புப்படி இப்பொழுது புள்ளிபட்டியலில் 3வது இடத்தில உள்ளது சிஎஸ்கே. அதனால் இந்த ஆண்டு நிச்சியமாக சிஎஸ்கே அணி ப்லே- ஆஃப் சுற்றுக்குள் வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.
ஐபிஎல் 2021 முதல் போட்டியில் சிஎஸ்கே அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. அதில் தோனி ஒரு ரன்கள் கூட அடிக்காமல் ஆட்டம் இழந்தார். இதனை பற்றி பேசிய முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பிர் ; தோனி அவரது பேட்டிங் போசிஷன் மாற்ற வேண்டும்.
7வது இடத்தில் பேட்டிங் செய்தால் நிச்சியமாக தோனியால் சிஎஸ்கே அணியை வழிநடத்த முடியாது. அவர் குறைந்தது 4வது அல்லது 5வது இடத்திலாவது பேட்டிங் செய்தால் மட்டுமே சிஎஸ்கே அணியை வழி நடத்த முடியும் என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர்.
அதுமட்டுமின்றி தோனி ஒன்றும் பழைய மாதிரி இல்லை, எந்த நிலையில் சிக்சர் அடிக்க கூடிய தோனி இப்பொழுது இல்லை. அதனால் பேட்டிங் போசிஷன் நிச்சியமாக தோனி மாற்றினால் மட்டுமே சிஎஸ்கே அணிக்கு நல்லதாக இருக்கும் என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர்.