இதனால் தான் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது..! தோனி சொன்ன காரணம் ..இதோ..!

இதனால் தான் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது..! தோனி சொன்ன காரணம் ..இதோ..!

மேட்ச் 12: மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ருதுராஜ் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அதன்பின்னர் பேட்டிங் செய்த அனைவரும் இறுதி ஓவர் வரை அதிரடியான ஆட்டத்தை விளையாடியுள்ளனர். அதில் டுப்ளஸிஸ் 33 ரன்கள், மொயின் அலி 26 ரன்கள், சுரேஷ் ரெய்னா 18 ரன்கள்,அம்பதி ராயுடு 27 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 8 ரன்கள், தோனி 18 ரன்கள்,சாம் கரண் 13 ரன்கள்,பிராவோ 20 ரன்கள் எடுத்துள்ளனர்.

பின்பு 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதி ஓவர் வரை போராடி தோல்வியை சந்தித்தது. அதில் ஜோஸ் பட்லர் தவிர யாருமே சரியான ஆட்டத்தை விளையாடவில்லை என்பதே உண்மை. அதில் ஜோஸ் பட்லர் 49 ரன்கள், மனன் வோரா 14 ரன்கள், சாம்சன் 1 ரன்கள், சிவம் துபே 17 ரன்கள், மில்லர் 2 ரன்கள், பராக் 3 ரன்கள், ராகுல் திவாட்டியா 20 ரன்களை எடுத்துள்ளனர்.

ஐபிஎல் 2021யின் முதல் போட்டியில் எப்படி சஞ்சு சாம்சன் எப்படி சதம் அடித்தாரோ.. அதே போல ஆட்டத்தை சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியிலும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக 1 ரன்னில் ஆட்டம் இழந்தார் சஞ்சு சாம்சன். அதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். வெற்றியை கைப்பற்றிய சிஎஸ்கே அணி புள்ளிபட்டியலில் 2வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6வது இடத்திலும் உள்ளது.

போட்டிக்கு முடிந்த பிறகு தோனி அளித்த பேட்டியில் வெற்றியை குறித்து பேசிய அவர் ; எங்களது முழு நோக்கம் அதிகப்படியான ரன்கள் எடுப்பது தான். அதன்பின்னர் பவுலிங் செய்து கட்டுப்படுத்தலாம் என்று தன முடிவு செய்து இருந்தோம். அதே போல சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் அதிரடியாக பேட்டிங் செய்து 188 ரன்களை எடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி சுழல்பந்து வீச்சாளர் ஆன மொயின் அலி, ஜடேஜா போன்ற வீரர்களின் பவுலிங் அசத்தலாக இருந்தது. ஜடேஜா 2 விக்கெட் மற்றும் மொயின் அலி 3 விக்கெட்டை கைப்பற்றி சிஎஸ்கே அணியின் வெற்றி பாதைக்கு வழிவகுத்தனர். அதிலும் முக்கியமான ஒன்று முதல் சில ஓவரில் விக்கெட்டை கைப்பற்றிய சாம் கரனும் வெற்றி காரணமாக உள்ளார் என்று கூறியுள்ளார் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி.