ஐபிஎல் 2021, போட்டிகள் ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். இதுவரை 25 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது , நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று… !
ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் அருமையான ஆட்டத்தை விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5 போட்டியில் வெற்றியையும் , 1 போட்டியில் தோல்வியையும் கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதனால் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்கவாட் 4 ரன்களில் ஆட்டம் இழக்க, அதன் பின்னர் பேட்டிங் செய்த வீரர்கள் அதிரடியாக விளையாடி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 218 ரன்களை எடுத்துள்ளனர்.
அதில் ருதுராஜ் 7 ரன்கள், டுபலஸிஸ் 50 ரன்கள், மொயின் அலி 58 ரன்கள், சுரேஷ் ரெய்னா 2 ரன்கள், அம்பதி ராயுடு 72 ரன்கள், ஜடேஜா 22 ரன்களை விளாசியுள்ளார். பின்பு 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்க போகிறது மும்பை இந்தியன்ஸ் அணி, வெற்றி பெறுமா இல்லையா ?? பொறுத்து தான் பார்க்க வேண்டும்..
போட்டி முன் பிறகு அளித்த பேட்டியில் தோனியிடம், உங்கள் அணியில் உள்ள பெஞ்ச் வீரர்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் தோனி ; எப்படி சிஎஸ்கே அணிக்காக விளையாடும் 11 பேர் முக்கியமோ அதேபோல தான் பெஞ்ச் வீரர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரை, அணி சிறப்பாக விளையாடும் போது அணியின் வீரர்களை மாற்றுவது என்பது உண்மை..
அதனால் நிச்சியமாக அனைத்து வீரர்களுக்கும் ஒருநாள் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி. இதுவரை சென்னை அணியில் இருந்து 11 பேர் இடத்தில் இல்லாத வீரர்கள் ; ராபின் உத்தப்ப, கிருஷ்ணாப்ப கவுதம், ஹரி ஷங்கர் ரெட்டி, புஜரா, போன்ற வீரர்கள் இருக்கின்றனர்.