இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஆரம்பித்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா காரணமாக தற்காலிகமாக போட்டியை நிறுத்திவைத்துள்ளனர் பிசிசிஐ.
மே 3ஆம் தேதி நடக்க வேண்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ள போட்டியை பிசிசிஐ ரத்து செய்தது பிசிசிஐ. ஏனென்றால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சில வீரருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எல்ல வீர்ரகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்பின்னர் அனைத்து வீர்ரகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இருவருக்கு 3 பெருகும், சன்ரைசர்ஸ் ஐராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், ஒட்டுமொத்தம் போட்டியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதிலும் இந்தியாவா இல்லை வேறு நாட்டில என்று இன்னும் முடிவு செய்யவில்லை. செப்டம்பர் மாதத்தில் ஒருவேளை இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்தால் நிச்சியமாக இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகளை நடத்த அதிக வாய்ப்புள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.
சமீபத்தில், 29 போட்டிகள் நடந்த போட்டிகளை வைத்து 1 முதல் 8 வரை தரவரிசையை வெளியிட்டுள்ளது, ஒரு செய்தி இணையதளம். இதுவரை 29 போட்டிகளை வைத்து எந்த கேப்டன் எந்த இடத்தில் உள்ளார் என்பதை பகிர்ந்துள்ளனர்.
தரவரிசை பட்டியல் ;
No.1 ; தோனி
தோனி, தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளை விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனால் தோனி முதல் இடத்தில் உள்ளது.
No.2 ; Rishab Pant
ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி, இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
No.3 ; Virat Kohli
விராட் கோலி , தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 7 போட்டிகளை விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
No.4 ; Sanju samson
சஞ்சு சாம்சன் , தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளை விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
No.5; Rohit Sharma
ரோஹித் சர்மா , தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளை விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
No.6 ; K.L.Ragul
கே.எல்.ராகுல் , தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளை விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
No.7 ; David Warner
டேவிட் வார்னர் , தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி இதுவரை 7 போட்டிகளை விளையாடி 1 போட்டிகளில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.
No.8 ; Eoin Morgan
ஈயின் மோர்கன் , தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளை விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.