HomeIPLவீடியோ : தோனி தான் கேப்டனா ? ரவீந்திர ஜடேஜாவுக்கு அறிவுரை கூறிய தோனி வீடியோ...

வீடியோ : தோனி தான் கேப்டனா ? ரவீந்திர ஜடேஜாவுக்கு அறிவுரை கூறிய தோனி வீடியோ வைரலானது ;

இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணிக்கு முதல் 7 ஓவர் மந்தமாக விளையாடினாலும் பின்பு ராபின் உத்தப்பா மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணிக்கு ரன்கள் குவிந்தன. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 216 ரன்களை அடித்தது சென்னை.

அதில் ருதுராஜ் 17, ராபின் உத்தப்பா 88, மொயின் அலி 3, ஷிவம் துபே 95, ரவீந்திர ஜடேஜா 0 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. சென்னை அணிக்கு போல சரியான தொடக்க ஆட்டம் அமையாமல் ஆட்டத்தை இழந்து பார்ட்னெர்ஷிப் அமையாமல் தவித்து வருகிறது பெங்களூர் அணி.

முதல் 10 ஓவர் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட்டை இழந்த நிலையில் 86 ரன்களை அடித்துள்ளனர். அதில் டூப்ளஸிஸ் 8, அனுஜ் ராவத் 12, விராட்கோலி 1, மேக்ஸ்வெல் 26, அகமத் 18 ரன்களை அடித்துள்ளனர். இன்னும் 10 ஓவர் மீதமுள்ள நிலையில் 131 ரன்களை பெங்களூர் அணி கைப்பற்ற வேண்டும்..?

இதற்கிடையில், 2வது ஓவர் பந்து வீசினார் சென்னை அணியை சேர்ந்த முகேஷ் சாவித்ரி அப்பொழுது டூப்ளஸிஸ் மற்றும் அனுஜ் ராவத் ஆகிய இருவரும் மூன்று ரன்களாக விளையாடினார்கள். அதனை பார்த்த சென்னை அணியின் முன்னாள் வீரரான மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜாவை கூப்பிட்டு என்ன செய்ய வேண்டுமென்று கூறினார்.

அதன் வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. என்ன தான் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்றாலும், தோனியின் வழிகாட்டுதல் ரவீந்திர ஜடேஜாவுக்கு உதவியாக உள்ளது தான் உண்மை. ஏனென்றால் தோனி கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை (2021) சிறப்பாக சென்னை அணியை வழிநடத்தியுள்ளார்.

அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த நாடு நடைபெற்ற போட்டியில் சென்னை அணி நான்கு போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியை பெற்று வருகிறது. இந்த முறை சென்னை அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா இல்லையா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img