தோனி இப்படி எல்லாம் செய்வார் என்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை ; விராட்கோலி ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகளுக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.

அதனை தொடர்ந்து நாளை மறுநாள் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருப்பதால் அனைவரும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றனர். மீதமுள்ள இரு போட்டிகளில் ஒரு போட்டியில் இந்திய அணிவென்றால் உலகி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும் இந்திய.

இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் : விராட்கோலி

விராட்கோலியின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு வரை விராட்கோலியின் பங்களிப்பு மிகவும் மோசமான ஒன்றாக தான் இருந்தது.

ஆனால் ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் சிறந்த கம்பேக் கொடுத்தார் விராட்கோலி. அதுமட்டுமின்றி இப்பொழுது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் விராட்கோலி மற்றும் சூர்யகுமாரின் அதிரடியான பங்களிப்பு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் விராட்கோலி அளித்த பேட்டியில் அவர் கடந்த வந்த பாதையில் எப்படி எல்லாம் சமாளித்தார். அதிலும் யார் யார் அவருடைய (விராட்கோலி) கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் உதவியாக இருந்தார்கள் என்பதை பற்றி பேசியுள்ளார்.

அதில் “நான் எப்பொழுது தோனிக்கு கால் செய்தாலும் 99% போன் எடுக்கவே மாட்டார். ஏனென்றால், அவருடைய பழக்கமே அப்படித்தான். ஆனால் நான் கடினமாக இருந்த நேரத்தில் தோனியே எனக்கு இரு முறை கால் செய்து என்னிடம் அவரே பேசினார். அது எனக்கு ஆறுதலாக இருந்தது என்று கூறியுள்ளார் விராட்கோலி.”

இந்திய அணியின் கேப்டனாக இடம்பெற்ற தோனி பல வீரர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார் என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, ஐபிஎல் டி-20 போட்டிக்கான தொடரில் மட்டும் விளையாடி வருகிறார் தோனி.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here