இவரோட எப்படி தோனியை ஒப்பிட முடியும் ?? இவருக்கு கேப்டன் செய்வே தெரியாது…! முன்னாள் இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் அதிரடி கருது ; முழு விவரம்..

கடந்த 2016 மாற்றும் 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடை செய்யப்பட்ட. ஏனென்றால் இந்த இரு அணிகளும் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பிசிசிஐ இரு அணிகளையும் (சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் )அணிகளையும் தடைசெய்துள்ளனர்.

அதனால் 2016 மற்றும் 2017 ஆம் நடைபெற ஐபிஎல் போட்டியில் இந்த இரு அணிகளுக்கு பதிலாக குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் அறிமுகம் செய்யப்பட்டனர். அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணியிலும் , ரெய்னா, ஜடேஜா போன்ற வீரர்கள் குஜராத் அணியிலும் இருந்தனர்.

ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணிக்கு நிச்சியமாக தோனி தான் கேப்டனாக இருப்பர் என்று ரசிகிரகள் நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளர் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தான் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் என்று கூறினார். அதனால் மிகவும் சோகத்தில் மூழ்கினார்.

2017ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் இறுதி போட்டி வரை சென்றதற்கு தோனி தான் காரணம்…ஸ்டீவ் ஸ்மித் காரணம் இல்லை என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் ஆல் – ரவுண்டர் ராஜட் பாட்டியா

2017 ஆம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணி இறுதி போட்டி வரை சென்றுள்ளது. ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி மகேந்திர சிங் தோனியுடன் சேர்த்து பேச முடியும். ஸ்டீவ் ஸ்மித்துக்கு கேப்டன் செய்யவே தெரியாது. எந்த நேரத்தில் எந்த பவுலர் பந்து வீச வேண்டும், இறுதி ஓவரில் யாருக்கு பவுலிங் தர வேண்டும் என்பதெல்லாம் ஸ்டீவ் ஸ்மித்துக்கு தெரியாது.

ட்ரெண்டிங் செய்தி : இந்த இருவருக்கு டி -20 உலககோப்பையில் கலந்து கொள்ள தகுதி உள்ளது ;; வி.வி.எஸ். லட்சுமன் கருத்து… யார் அந்த இருவர் தெரியுமா??

ஆனால் தோனி அப்படி இல்லை, அவரால் அணியில் உள்ள எல்ல வீரர்களையும் கணிக்க முடியும். அவரது கேப்டன் பொறுப்பு என்பது மிகவும் அற்புதமாக இருக்கும். 2017 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில் ராகுல் திருப்பதியை எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வைப்பது என்றே ஸ்மித்துக்கு தெரியாது என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராஜட்.

அதுமட்டுமின்றி 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎள் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணி இறுதி போட்டி வரை சென்றத்துக்கு தோனி தான் முழு காரணம். எப்படி ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக சில ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வைத்திருந்தார்கள் என்றுதான் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது கேப்டனையே அணியில் இருந்து நீக்கியுள்ளார் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்கள் என்று கூறியுள்ளார் ராஜட் பாட்டியா.