சேட்டை பிடிச்ச பையன் சார் தோனி ; இப்படியெல்லாம் தோனி செய்வாரா ?? தோனியை பற்றி பேசிய சேவாக் ; ஓபன் டாக் ;

முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி தோனி தலைமையிலான இந்திய அணி தான் அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வை அறிவித்தார் தோனி. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். ஆனால் இன்னும் ஐபிஎல் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது சக வீரர்களை சரியாக பயன்படுத்தி பல வெற்றிகளை பெற்றுள்ளார்.

எப்போதும் ஒரு வீரரை பற்றி இன்னொரு வீரர் பேசுவது வழக்கம். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் , தோனியை பற்றி பேசியுள்ளார். தோனி பற்றி கூறுகையில் ; ஒருநாள் பிசிசிஐ தலைமை செயலாளர் ஒருவர் தோனியின் தொலை பேசியில் தொடர்பு முயற்சி செய்தார். ஆனால் அப்பொழுது அவர் தொலை பேசி எடுக்கவில்லை.

பின்னர் அடுத்த முறை தோனியை நேரில் சந்தித்த பிசிசிஐ உறுப்பினர், தோனியிடன் ஒரு புதிய போன் வாங்கிக்கொடுத்து இனிமேல் இதில் பிசிசிஐ உறுப்பினர்கள் மட்டும் உங்களை தொடர்ப்பு கொள்வார்கள் என்று கூறியுள்ளதாக விரேந்திர சேவாக் நகைச்சுவையாக பேசியுள்ளார்.

தோனி எப்பொழுது அவர் தொழில் நுட்ப பொருட்களை அதிக அளவில் பயன்படுத்த மாட்டார். அதுமட்டுமின்றி, கொரோனா தொடங்கிய ஆரம்ப காலத்தில் அவரது சொந்த இடத்தில் விவசாயம் செய்து கொண்டு வந்துள்ளார் தோனி, அதன் புகைப்படங்கள் சமுகவலைத்தளங்களில் அதிக பகிரப்படும் வந்தனர்.

மகேந்திர சிங் தோனி இறுதியாக கடந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக நியமனம் ஆனார். ஆனால் அதில் இந்திய அணி லீக் போட்டிகளில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.