ஐபிஎல் 2022 போட்டிக்கான பேச்சு சூடுபிடிக்க தொடங்கியது. அதற்கு முக்கியமான காரணம் ஐபிஎல் 2022யில் புதிதாக இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதுமட்டுமின்றி, கடந்த 2020 மற்றும் 2021 போட்டிகள் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.


ஆனால் இந்த ஆண்டும் ஐபிஎல் 2022 போட்டிகள் இந்தியாவில் நடைபெற வாய்ப்புகள் மிகவும் குறைவானது. அதற்கு முக்கியமான காரணம் மீண்டும் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி பிப்ரவரி மாதத்தில் தான் உச்சத்தை எட்டும் என்று இந்திய மருத்துவ குழு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் இந்த முறை ஐபிஎல் 2022 போட்டி நிச்சியமாக இந்தியாவில் நடைபெறுவது சிரமம் தான். அதுமட்டுமின்றி பிப்ரவரி மாதத்தில் தான் ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் பெங்களூரில் மிகப்பெரிய அளவில் நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை கேட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். அதற்கு காரணம் தல தோனி தான். கடந்த 2008ஆம் ஆண்டு அதாவது ஐபிஎல் அறிமுகம் ஆன அன்று முதல் இப்பொழுது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்துவது மகேந்திர சிங் தோனி மட்டுமே.


இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. பின்னர் கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றார். ஆனால் இன்னும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இப்பொழுது அனைவரும் தோனி எப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்ற கேள்வி கடந்த ஐபிஎல் 2021 இறுதியில் தோன்றியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் என்னுடைய இறுதி போட்டியில் நிச்சியமாக அனைத்து ரசிகர்களும் இருக்கும் நிலையில், அதுவும் சென்னை மைதானத்தில் தான் என்று கூறினார் மகேந்திர சிங் தோனி.


ஐபிஎல் 2022போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெறும் என்று பலர் அவரவர் கருத்துக்களை பதிவு செய்துகொண்டே வந்தனர். ஏனென்றால் அந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு தான். அதனால் ஐபிஎல் 2022 போட்டி சென்னையில் நடக்கும்போது அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்று சிஎஸ்கே அச்சத்தில் இருந்தனர்.
ஆனால் இப்பொழுது அது நடக்காது போல தான் தெரிகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு இதேபோல இந்தியாவில் ஐபிஎல் 2021 சிறப்பாக தொடங்கியது. ஆனால் சில வீரருக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தால் போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்தது பிசிசிஐ. பின்னர் பல பிரச்சனைகளை எதிர்கொண்டது.


அதனால் கண்டிப்பாக இந்த முறை அவ்வளவு கடினமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் நிச்சியமாக பிசிசிஐ நடத்த வாய்ப்பே இல்லை. ஏனென்றால் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது. என்ன செய்ய போகிறது பிசிசிஐ ? மீண்டும் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகமா ?
அதுமட்டுமின்றி, இந்த முறை தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டாவது வீரராக தான் தக்கவைக்கப்பட்டுள்ளார். முதல் வீரராக ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வரிசையில் சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ரசிகர்களே நீங்க சொல்லுங்க..! ஐபிஎல் 2022 போட்டிகள் எங்கு நடைபெற வேண்டும் ? இந்திய அல்லது வெளிநாடுகளில் ? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பதிவு செய்யுங்கள்.!