இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. 15வது ஐபிஎல் 2021 போட்டியில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவரில் 220 ரன்களை அதிரடியாக அடித்துள்ளனர். அதில் ருதுராஜ் 64 ரன்கள், தோனி 17 ரன்கள், டுபலஸிஸ் ஆட்டம் இழக்காமல் 95 ரன்களை விளசியுள்ளார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணி 220 ரன்களை எடுத்துள்ளது.
பின்பு 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்கத்தில் சிறிது சொதப்பினாலும் 6வதாக பேட்டிங் செய்த ஆன்ட்ரே ரசல் மின்னல் வேகத்தில் 50-க்கு மேற்பட்ட ரன்களை விளாசினார். பின்னர் எதிர்பார்த்த விதமாக சாம் கரண் பந்தில் போல்ட் ஆனார்.
இருந்தாலும் அதன்பின்னர் பேட்டிங் செய்த பேட் கம்மின்ஸ் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 66 ரன்களை எடுத்துள்ளார். ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்பொழுது சிஎஸ்கே அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி இடத்திலும் உள்ளது.
தோனி இந்த விசியத்தில் எப்பையுமோ சரியாக தான் முடிவு செய்வார் ; மீண்டும் நிரூபித்த தோனி …என்ன தெரியுமா ?
முதல் மூன்று போட்டிகளிலும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத ருதுராஜ் கெய்க்வாட் 4வது போட்டியில் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் )அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 64 ரன்களை எடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி முதல் மூன்று போட்டிகளில் சரியாக பேட்டிங் செய்யாததால் அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா அல்லது வேறொரு வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அவரவர் கருத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.
இருந்தாலும் அவரை அணியில் இருந்து நீக்காமல் மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார் தோனி. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 64 ரன்களை விளாசியுள்ளார். ஒரு சில போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதனால் அணியில் இருந்து யாரையும் தோனி வெளியேற்ற மாட்டார். ருதுராஜ் கெய்க்வாட் முதல் போட்டியில் 15 ரன்கள், இரண்டாவது போட்டியில் 15 ரன்கள் மற்றும் மூன்றாவது போட்டியில் 10 ரன்களை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.