இந்த விஷயம் Dhoni – க்கு நல்லாவே தெரியும், யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ; பார்திவ் பட்டேல்

ஐபிஎல் 2021 ஏன் ரத்து செய்யப்பட்டது ?

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் பலமான பாதுகாப்புடன் ஆரம்பித்தது. ஆனால் எதிர்பாராத விதமாக சில வீரருக்கு கொரோனா தோற்று இருப்பதால் உடனடியாக ஐபிஎல் போட்டியை ரத்து செய்துள்ளனர்.

எப்பொழுது மீதமுள்ள போட்டிகள் நடைபெறும்?

ஐபிஎல் 2021யில், மொத்தம் 60 போட்டிகளில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கொரோனா தோற்று காரணமாக பாதியில் நிறுத்திவைத்துள்ளது பிசிசிஐ. மீதமுள்ள போட்டி செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஏனென்றால் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சீரியஸ் போட்டிகள் நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணிகளில் ஒன்றுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுதுவரை (2021) மகேந்திர சிங் தோனி மட்டும் தான் சிஎஸ்கே அணியை சிறப்பான முரையில் வழிநடத்தி வருகிறார்.

தோனியை பற்றி பேசிய பார்திவ் பட்டேல் ;

முன்னாள் இந்திய வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான பார்திவ் பட்டேல் சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் க்கு அளித்த பேட்டியில் ; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்பையுமே வலுவான அணிதான் அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஐபிஎல் 2021, முன்பே எனக்கு தெரியும் நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 4 இடத்தில் வரும் என்று. கடந்த ஆண்டு மோசமான நிலையில் இருந்த சென்னை சூப்பர் கின்ஸ் அணி இந்த ஆண்டு சிறப்பான முறையில் விளையாடி 2வது இடத்தில் உள்ளது.

இதற்கான காரணம் , தோனி தான். அவருக்கு நன்கு தெரியும் அணியை எப்படி வழிநடத்த வேண்டுமென்று. அதுமட்டுமின்றி ஐபிஎல் 2021 முன்பு எல்லாரும் சுரேஷ் ரெய்னா 3வது இடத்தில் தான் பேட்டிங் செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக மொயின் அலியை 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்துள்ளார். அதனால் சிஎஸ்கே அணியால் அதிக ரன்களை அடிக்க முடிந்தது. அதனால் தோனிக்கு நன்கு தெரியும், யாரை எப்படி விளையாட வைக்க வேண்டுமென்று என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்திவ் பட்டேல்.