கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி20 லீக் போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது. அதுவும் இந்த ஆண்டு ஐபிஎல் டி20 2022 போட்டியில் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.
மொத்தம் 10 அணிகளை கொண்டு ஐபிஎல் 2022 நடைபெற உள்ளது. அதனால் மெகா ஏலத்தை நடத்த போவதாக பிசிசிஐ கூறியது. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மிதமுள்ள 8 அணிகளும் அதிபட்சமாக தலா நான்கு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளாமல் என்று பிசிசிஐ கூறியது. அதில் மூன்று இந்திய வீரர், ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது இரு வெளிநாட்டு வீரர் இரு இந்திய வீரர் என்ற அடிப்படையில் தான் செய்ய வேண்டும் .
மிதமுள்ள அனைத்து வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க போகிறார்கள் . புதிய இரு அணிகளும் அதிகபட்சமாக மூன்று வீரர்களை கைப்பற்றிக்கொள்ள பிசிசிஐ அனுமதி கொடுத்தது. அதற்கான ஏலம் வருகின்ற பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதில் யார் எந்த அணியில் இடம்பெற போகிறார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
ஐபிஎல் டி20 லீக் போட்டியில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே அணி தான் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த முறை மெகா ஏலம் நடைபெற உள்ளதால் ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, மற்றும் மகேந்திர சிங் தோனி போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது சிஎஸ்கே அணி.
இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி ஏலம் நடைபெற உள்ளதால் மகேந்திர சிங் தோனி இப்பொழுது சென்னை வந்துள்ளார். அது நிச்சியமாக சிஎஸ்கே அணியின் ஏலத்தை பற்றிய பேச்சுவார்த்தைக்கு தான் என்று தெரிகிறது. தோனி ஒரு வீரராக சரியாக பேட்டிங் செய்யவில்லை என்றாலும் ஒரு கேப்டனாக சிறப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார்.
அதனால் இந்த ஆண்டு மெகா ஏலம் என்பதால் தோனியும் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக பங்கேற்க போகிறார் போல தெரிகிறது. தோனி மட்டும் ஏலத்தில் இருந்தால் நிச்சியமாக சிறந்த வீரர்களை சரியான விலைக்கு வாங்க உதவியாக இருப்பார். ஆமாம்..! அதிக அனுபவம் வாய்ந்த வீரராக தோனி விளங்கி வருகிறார். அதனால் அவருடைய அனுபவம் நிச்சியமாக இந்திய அணிக்கு தேவையான ஒன்று என்பதில் சந்தேகமில்லை.