ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். இதுவரை ஐபிஎல் 2021யில் , 25 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 2வது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், 3வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 4வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 5வது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 6வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், 7வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இறுதி இடத்தில் சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியும் உள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டிவில்லியர்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியை பற்றி கருத்து கூறியுள்ளார். நாம் அனைவரும் தெரிந்த ஒரு விஷயம் விராட் கோலி மற்றும் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ். இந்த ஆண்டு ஐபிஎல் 2021 டி-20 போட்டியில் இதுவரை 6 போட்டிகளில் 5 போட்டியில் வெற்றியை கைப்பற்றி 10 புள்ளிகளுடன் +0.089 ரன்-ரேட் படி புள்ளிப்பட்டியளில் 3வது இடத்தில் உள்ளது பெங்களூர் அணி.
சமீபத்திய அளித்த பேட்டியில் விராட் கோலி ஒரு நண்பராக என்ன என்ன செய்துள்ளார் என்பதை பகிர்ந்துள்ளார். நான் விராட் கோலியிடம் பேசுவதற்கே பயப்படுகிறேன். ஏனென்றால் நான் சமீபத்தில் அவர் அணிந்த ஷூ நன்றாக இருக்கிறது என்று கூறினேன். அவர் அடுத்த நாளே எனக்கு அதே போல ஒரு ஷூ ஆர்டர் செய்து வங்கி கொடுத்தார்.
என்னுடைய போன் சார்ஜ் இல்லை என்ற சொன்னால் போதும் திடிரென்று புதிய பவர் பேங்க் வங்கி அதனை எனக்கே கொடுத்து விடுவார். எனக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும், அதனால் காபி தயாரிக்கும் மிஷின் அமேசான் இணையதளத்தில் எனக்கு ஆர்டர் செய்துள்ளார் விராட் கோலி. இதனால் எனக்கு அவரிடம் எதை கேட்க வேண்டும் என்று ஒண்ணுமே புரியவில்லை… என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இவர்களின் நட்பை பற்றி உலகமே பாராட்டி வருகிறது. விராட் கோலி என்னதான் விளையாட்டில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டாலும், நட்பு என்று வந்துவிட்டால் அவர் மிகச்சிறந்த வீரர் மட்டுமின்றி நல்ல ஒரு மனிதர் என்று நிரூபித்துள்ளார் விராட் கோலி.